(Reading time: 6 - 12 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

“இந்த ஊர் க்ளைமேட்டில் அப்படி தெரியுதா இருக்கும்!” என்று தோழிகளுக்கு பதில் சொன்னாள் அவள்.

  

“இருக்கும் இருக்கும்... நம்ம சுபா கூட பளிச் பளிச்சுன்னு தான் மின்னுறா!”

  

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பெரிய சிரிப்பு சத்தமும், தொடர்ந்து ஏதோ பாட்டும், கைத் தட்டும் ஓசையும் கேட்டது.

  

அனைவரும் திரும்பி ஓசை வந்தப் பக்கத்தை பார்த்தனர்... அருவியின் அருகே இருக்கும் மண்டபத்தில் சில இளைஞர்கள் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தனர்...

  

மற்றவர்கள் அவர்களை பார்த்து ஒதுங்கிப் போனார்கள்...

  

“ச்சே எங்கே போனாலும் இப்படி யாரவது இருக்காங்க! எவ்வளவு நல்ல டூரிஸ்ட் ஸ்பாட் கொஞ்சமாவது டீசன்ட்டா பீகேவ் செய்றாங்களா பாரு! வேற ஊர்லருந்து, நாட்டில இருந்து யாராவது வந்தால் திரும்ப இந்த பக்கம் வருவாங்களா?”

  

பொரிந்து தள்ளிய மீனா, சௌந்தர்யாவை கேள்வியாகப் பார்த்தாள். பொதுவாக இது போன்ற விஷயங்களில் அதிகம் கோபப் படுவது சௌந்தர்யாவாக தான் இருக்கும்...

  

ஆனால் அதிசயமாக இம்முறை சௌந்தர்யா அமைதியாக இருந்தாள்...

  

ஆனால் அவளின் பார்வை அந்த இளைஞர்கள் இருந்த பக்கம் தான் இருந்தது...

  

மீனா புரியாமல் பார்த்தாள்...

  

சௌந்தர்யா முறைத்து பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் ‘அவன்’ இருந்தான்... அவனுடன் இருந்தவர்களை போல அவன் சத்தம் போட்டு சிரிக்கவோ பேசவோ இல்லை என்றப் போதும் அவர்களுடனே இருந்தான்... அவன் முகத்தில் சின்ன புன்னகை வேறு!

    

தொடரும்...

Go to Un Kadhal irunthal pothum...! story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.