(Reading time: 6 - 12 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

சௌந்தர்யாவின் மறுப்பை சட்டை செய்யாமல் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றாள் மீனா.

  

ல்லூரியில் உடன் பயின்ற தோழி கவிதாவின் திருமணத்திற்காக சௌந்தர்யா, மீனா மற்றும் எட்டு தோழிகள் ஒன்றாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அருமனை எனும் ஊருக்கு வந்திருந்தனர்.

  

கவிதா பல முறை அவளின் ஊரின் அருகே இருக்கும் இந்த திற்பரப்பு நீர்விழ்ச்சியைப் பற்றி சொல்லி இருக்கிறாள். சௌந்தர்யாவிற்கு இயற்கை எழிலில் எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு...

  

சென்னையில் இருந்து பேருந்தில் வரும் போது, விடிக் காலையில் நாகர்கோவிலை நெருங்கி விட்டதை பறைசாற்றிய அந்த மலைத் தொடரும், தாமரைக் குளங்களும், வளைவான சாலைகளும், வித்தியாசமான வீடுகளும் அவளை வெகுவாக கவர்ந்தன...

  

கவிதாவின் வீட்டிற்கு வந்தப் பிறகு கேட்கவே வேண்டாம்! அவளுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்துப் போனது! பார்க்கும் திசை எங்கும் பச்சை பசலேன கண்ணை கவரும் மரங்கள், செடிகள்... மாமரம், பலா மரம், ஐனி மரம் என இதுவரை அவள் பார்த்தே இராத மரங்கள்... ரப்பர் தோட்டங்கள்... மலையாளம் கலந்த தமிழ்... அனைவரையும் நட்பாக, உறவினராக பாவிக்கும் மக்கள்...

  

சௌந்தர்யா இந்த ஊரில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஏனும் வாங்கி விடுவது என மனதினுள் முடிவு செய்துக் கொள்ளும் அளவிற்கு அவளுக்கு அந்த ஊரை மிகவும் பிடித்திருந்தது.

  

தமிழகத்திற்கு முன்னோடியாக பல வருடங்களுக்கு முன்பே ஒரு மாவட்ட ஆட்சியரினால் தொடங்கப் பட்ட திட்டத்தினால், கடைகளில் மட்டுமில்லாமல் அந்த மாவட்ட மக்களும் எப்போதோ பிளாஸ்டிக் பையைத் தவிர்க்கத் தொடங்கி இருந்தார்கள்! இதைத் தோழி வழியாக கேட்டுத் தெரிந்துக் கொண்டப் போது அவர்களின் சமுகப் பொறுப்புணர்ச்சியை சௌந்தர்யாவால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தாத முன்னோடி மாவட்டமாக நாகர்கோவிலை உருவாக்க திட்டம் தொடங்கிய கலக்டர்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.