"எல்லாம் சரியா இல்லைங்க. நம்ம இரண்டுப் பேருக்கும் ஒரே காட்டேஜ் ரிசர்வ் செய்து குளறுபடி செய்திருக்காங்க!" என்றான் அதுல் கண்டனம் தெரிவிப்பதுப் போல!
"சார், குளறுபடி செஞ்சது நாங்க இல்லை சார். உங்க ரிசர்வேஷன் நெக்ஸ்ட் மன்த்க்கு! நீங்க ஒரு மாசம் முன்னாடி வந்துட்டீங்க!" என ரோபோ குரலிலேயே பதில் சொன்னாள் பிரன்ட் டெஸ்க் பெண்.
"என்ன?"
"நெக்ஸ்ட் மன்த்தா??"
அதுல், ப்ரீத்தி இரண்டுப் பேரும் அதிர்ச்சியோடு கேட்டார்கள்.
"எஸ், இங்கே பாருங்க உங்க ரிசர்வேஷன் ஜூலை மாசத்துக்கு. நாங்களும் டேட் பார்க்காம குழம்பிட்டோம்."
அதுல் ப்ரித்தியின் மொபைலை வாங்கி தேதியை சரி பார்க்க, பிரன்ட் டெஸ்க் பெண் சாவியை எடுத்து மற்றவளிடம் கொடுத்தாள்.
"ஹாவ் அ குட் ஸ்டே மேம். ஏதாவது தேவைப்பட்டா இன்டர்காம்ல ஜீரோ டையல் செய்தா போதும்!"
பிரன்ட் டெஸ்க் பெண் பேசி முடிக்கும் முன்பே தேதியை பார்த்து அண்ணன் தவறாக புக் செய்திருப்பதை உறுதி செய்துக் கொண்டான் அதுல்.
"சாரி, நாங்க இந்த வீக் தான் ஸ்டே செய்யனும். ரிசர்வ் செய்யும் போது தப்பா மன்த் என்டர் செய்துட்டான் போலருக்கு. எங்களுக்கு வேற காட்டேஜ் புக் செய்ய முடியுமா? இந்த ரிசர்வேஷனை மாத்த முடிஞ்சா கூட ஓகே." அதுல் படபட என கேட்பதை பக்கத்தில் நின்றிருந்தவள் சுவாரசியத்துடன் பார்த்தாள்.