"அதெல்லாம் ரகசியம் கீதா அக்கா... ஷேர் பண்ணக் கூடாது..." என்றாள் வீணா கண் சிமிட்டிக் கொண்டு!!!
"அன்னைக்கு அவினாஷ் ரொம்ப ஃபீல் செய்தாரு... நீ ரொம்ப ஒல்லியாயிட்டேன்னு..."
"க்கும்... அதெல்லாம் சும்மா அக்கா... ஒய்ஃப் கொஞ்சம் குண்டானாலே என்ன இப்படி வெயிட் போட்டுட்டேன்னு கிண்டல் பண்ணுவாங்க..."
கீதாவும், வீணாவும் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் இந்து.
அதை கவனித்த கீதா,
"என்ன இந்து, இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்க? என்ன விஷயம்?" என்று அவளிடம் கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா..." என்றாள் இந்து இலகுவாக!
"நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமே இந்து? நாங்க எவ்வளவு நாள் தான் வெறும் ராஜீவையும், அவினாஷையும் கிண்டல் பண்ணி டைம் பாஸ் பண்ணுறது?"
"ஆமாம், அது தான் இப்போ ரொம்ப முக்கியம்...!!!"
"ஹே, என்ன நீ ரொம்ப தான் அலுத்துக்கிற?"
இந்து பதில் சொல்லும் முன் குறுக்கிட்ட வீணா,
"எனக்கு தெரியும் கீதாக்கா ஏன் இந்து இன்னைக்கு அமைதியா இருக்கான்னு..."
"ஆமாம்... இவங்களுக்கு தான் என் மைன்டை படிக்குற பவர் இருக்கு... வாயை மூடு!" என்றாள் இந்து வெடுக்கென்று!