(Reading time: 4 - 7 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அவங்களா கெஸ் செய்துட்டு இருப்பாங்க. ஒரு வருஷம் என்ன பத்து வருஷம் ஆனாலும் கூட அப்படி தான்!"

  

"தப்பு அக்ஷரா சித்தப்பா என் கிட்ட கேட்டார். நீ ஜெயிச்ச ஈவன்ட் பத்தி தெரிஞ்சதும், எப்படி உன்னால முடிஞ்சதுன்னு சொல்லி, ரொம்ப சந்தோஷப் பட்டார். சித்தியும் கூட பக்கத்துல இருந்தாங்க. அவங்க நீ நினைக்குற மாதிரி கிடையாது. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அவங்க வேற ஜெனெரேஷன் அதனால அன்பை வேற மாதிரி காட்டுவாங்க."

  

"அப்படி பார்த்தா பெரியம்மா எல்லாம் எனக்கு புரியுற மாதிரி நடந்துக்குறாங்களே?"

  

"அம்மா வீட்டுல இருக்குறதால பேச நிறைய டைம் இருக்கு. சித்தி சித்தப்பா அப்படி கிடையாது. பெரிய பிஸ்னஸ் நடத்துறாங்க, அதையும் கவனிக்கனும்."

  

"என்னவோ சொல்ற, போ விவேக். சரி வா நாம கிளம்பலாம். உன் ஜெட் எப்படி இருக்குன்னு நான் பார்க்கனும்."

  

"அப்போ உன் கோபம் எல்லாம் போயிடுச்சுன்னு சொல்லாம சொல்ற. வெரி குட்."

  

"தப்பா புரிஞ்சுக்கிட்ட. நான் மனசை மாத்தினதுக்கு காரணம் ஜாக்ருதி. அவரை போல ஒரு சக்சஸ்புல் பெர்சனை சந்திக்க கிடைக்குற வாய்ப்பை நான் எதுக்கு மிஸ் செய்யனும்? இது எனக்கு கிடைச்சிருக்க பெரிய வாய்ப்பு!"

  

"இதுக்கு என்ன அர்த்தம்?"

  

"ஆதித்யா கிட்ட நான் கோஸி ஆகலைன்னு அர்த்தம்."

  

விவேக் அக்ஷரா பக்கம் முழுவதுமாக திரும்பி கவனமாகப் பார்த்தான். அடுத்த வினாடி சிரித்தான்.

  

"அக்ஷரா பெரிய பொண்ணா வளர்ந்துட்டா."

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.