(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

போல், கற்பகம்,

  

"என்ன விவேக் இது, ஏதோ நாளைக்கு மகாபலிபுரம் போகணும்னு சொன்னியாம்? என்ன விஷயம்?" என்றாள்.

  

"ஆமாம் அம்மா... காலையிலேயே கிளம்பனும், ரெடியா இருங்க..."

  

"இருடா... எதுக்குன்னு கேட்கிறேன்... நீ என்னடான்னா..."

  

"அம்மா, உங்களுக்கு உங்க சின்ன மருமகளை பார்க்கும் ஆர்வம் இருந்தா வாங்க.... நாளைக்கு அன்-அபிஷியலா இன்ட்ரோட்யூஸ் செய்து வைக்கிறேன்... ஆர்வம் இல்லைன்னா இங்கேயே இருங்க...."

  

"என்னடா சொல்ற?"

  

"என்னம்மா இப்படி ஆச்சர்யமா கேட்குறீங்க? நிஜம் தான் சொல்றேன்... நாளைக்கு உங்களுக்கும் அண்ணிக்கும் மட்டும் அறிமுக படலம்... எல்லாம் செட்டில் ஆன பிறகு மதுக்கு, அண்ணாக்கு, அப்பாக்கு எல்லாம் சொல்லலாம்..."

  

கற்பகம் பதில் சொல்லாது அவனையே சந்தேகமாக பார்க்கவும்,

  

"எதுக்கும் நாளைக்கு கொஞ்சம் நல்லா மேக்கப் எல்லாம் செய்துட்டு வாங்க அம்மா, அப்புறம் என்னோட அவளுக்கு உங்களை பிடிக்காமல் போனால் என்ன செய்வது?"

  

"போகும்டா போகும்... பிடிக்காமல் போனால் ரொம்ப நல்லது, போயிட்டு வாம்மான்னு அனுப்பி வைப்போம்...."

  

"அப்படி எல்லாம் கனவு காணாதீங்க அம்மா.... முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க... அவளுக்கே இன்னும் எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு தெரியாது. தெரிந்தால் அப்புறம் இந்த ஜென்மத்தில் நான் இப்படியே பிரமச்சாரியா இருக்க வேண்டியது தான்... உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லை தானே? நீங்க சாதாரணமா பேசுங்க, தப்பி தவறி எதையாவது உளறி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.