(Reading time: 5 - 10 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

  

ஷில்பா உதடுகளை சுழித்து ராஸ்பெரி ப்ளோ செய்தாள்.

  

"என்ன இது ஷில்பா?" என ப்ரீத்தி மகளிடம் சென்று கண்டிக்க, ஏஞ்சல் இப்போதும் சிரித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள். வசதியாக கால் மேல் கால் போட்டுக் கொண்டாள்.

  

எப்போதுமே தனியாக இருந்தே பழகி இருந்தவளுக்கு இந்த குடும்பத்தினர் துணை புதிய அனுபவமாக இருந்தது.

  

அதுல் வேர்வை நிறைந்த முகத்துடன் அவள் எதிரே வந்து நின்றான்.

  

"நான் இங்கே உட்காரலாமா?" என அவன் ஏஞ்சலுக்கு எதிரே இருந்த சேரை காண்பித்து கேட்க, ஏஞ்சல் தலை அசைத்தாள்.

  

"முடிஞ்ச அளவு உங்களை டிஸ்டர்ப் செய்யாம இருக்க ட்ரை செய்றோம். நிறைய அவுட்டிங் ப்ளான் செய்றேன் அப்போ உங்க வேலைக்கு தொல்லை இருக்காது." என அவளிடம் பேச தொடங்கினான் அதுல்.

  

ஏஞ்சல் புன்னகையோடு தலை அசைத்தாள்.

  

"இட்ஸ் ஓகே. நானும் காட்டேஜ்ல நிறைய நேரம் இருக்க மாட்டேன். காலைல கிளம்பினா ஈவ்னிங் தான் வருவேன். நீங்க எல்லோரும் என்னைப் பத்தி யோசிக்காம ப்ரீயா இருக்கலாம்."

  

"தேங்க்ஸ். நீங்களும் எப்போவாவது ப்ரீயா இருந்தா எங்க கூட அவுட்டிங் வாங்க."

  

"ட்ரை செய்றேன்."

  

அதுல் தலையை ஒரு பக்கமாக சரித்து, "எனக்குத் தெரியும்!" என்றான்.

  

ஏஞ்சல் என்ன என்பதாக பார்த்தாள். அதுல் அதுலாக அவளுக்கு விளக்கம் சொல்லவில்லை.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.