பாரதியை உமா மற்றும் பவித்ராவிடம் இருந்து காப்பாற்றுவது போல் மதுமதி அங்கே வந்தாள்.
"அண்ணி, அம்மாவும், அண்ணாவும், நைட் இங்கேயே ரிசார்ட்டில் தங்கிட்டு நாளை மெதுவா கிளம்பலாமான்னு கேட்டாங்க..."
"இவங்களை பத்தி தான் தெரியுமே அதற்கு தான் நான் எதற்கும் இருக்கட்டும்னு நித்யா செல்லத்திற்கு அதிகமா டிரஸ் எடுத்துட்டு வந்தேன்...."
"அடடா, பவி நாம எப்படி போறது?" என்றாள் பாரதி கேள்வியாக.
"என்ன மேடம் நீங்க, உங்களை எல்லாம் மட்டும் அனுப்பி வைப்போமா என்ன? பவித்ரா மேடம் ஹஸ்பண்ட் தங்கிட்டு போக சரின்னு சொல்லிட்டார், அவரோட அம்மாவும் ஓகே சொல்லியாச்சு, நீங்க இரண்டு பேர் மட்டும் தான்..."
பாரதி வேண்டாம் என்பது போல் பவித்ராவை பார்த்தாள். பவித்ராவிற்கும் தங்கி செல்வதில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை, எனவே,
"குழந்தையை வச்சுட்டு கஷ்டம் மது... நான் அவளுக்குன்னு எக்ஸ்ட்ராவா எதுவும் எடுத்துட்டு வரலை...." என்றாள்.
"என்ன பவி இது? நித்யாவுடைய டிரெஸ், பேபி புட் எல்லாம் நித்திலாக்கும் ஷேர் செய்ய மாட்டேனா என்ன? இதை எல்லாம் யோசிக்காத"
நான்கு பேரும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். என்ன விஷயம் என்று கேட்டு தெரிந்துக் கொண்டு,
"இந்த பேச்சே வேண்டாம்... இருப்பதை ஷேர் செய்துக்கலாம், மற்றபடி ஏதேனும் வேண்டும் என்றாலும், அவருக்கு ரொம்ப வேண்டியவங்க ரிசார்ட் தான், கேட்டால் ஆள் அனுப்பி போய் வாங்கி வந்து தருவாங்க, அதனால் எல்லோரும் தங்கி நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.