வருடம் 2016 மாதம் மார்ச் இரண்டாம் தேதி இரவு 9.30 மணியளவில்
போலீஸ் ஸ்டேஷன்
அபிநயாவிற்காக கேஸ் வாபஸ் செய்ய சென்ற அன்பரசன் அங்கு ரேவதி இருப்பதைக் கண்டதும் அவளிடம் சென்றான். ரேவதியோ ஓட்டலில் நடந்த திருட்டுப்பற்றியும் தான் கொண்டு வந்த பணத்தை பற்றியும் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு தனது பக்க விளக்கத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள். அதை கேட்டுக் கொண்டே அவ்விடம் சென்ற அன்பு ரேவதியிடம்
”நீங்க ரேவதிதானே” என பண்புடன் கேட்க அவளோ அவனை வியப்பாக பார்த்தபடியே சந்தேகத்துடன் தலையை மட்டும் ஆட்ட அவனோ சிரித்தபடியே
”என் பேரு அன்பரசன், உங்க ப்ரெண்ட் அபிநயா என் வீட்லதான் இருக்காங்க” என்றான்
அபிநயா என்றதுமே ரேவதியின் உடலில் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தவள் உடனே அவனிடம் பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டாள்.
”அபி எப்படியிருக்கா? நல்லாயிருக்காளா? அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? ஆமா, நீங்க யாரு? அவள் ஏன் உங்க வீட்ல இருக்கனும்? அவளுக்கு இந்த ஊரே தெரியாதே இங்க இருக்கறவங்களை பத்தியும் அவளுக்கு தெரியாது, நீங்க என்ன அவளுக்கு சொந்தமா தெரிஞ்சவங்களா உறவுக்காரங்களா இல்லை, அவளோட அப்பா அனுப்பின ஆளா?” என கேட்டுக் கொண்டே போக அன்புவுக்கு தலை சுற்றியது.
”நல்லவேளை அபி இவளைப்போல இல்லை இருந்திருந்தா என் நிலைமை என்னாகிறது” என மனதில் நினைத்துக் கொண்டே ரேவதியிடம்
”இருங்க இருங்க என்னை கொஞ்சம் பேச விடுங்க” என அவன் கெஞ்சிய பின்புதான் ஓய்ந்தாள் ரேவதி
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.