குமரன் ஜீவாவிடம் முதலில் இருந்து கதை சொல்லத்தொடங்கினான்
”எங்க குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம் ஜீவா, என் தாத்தாவுக்கு 3 பையன்கள் பிறந்தாங்க, அதுக்கு முன்னாடி என் பாட்டனுக்கு என் தாத்தா ஒரே பையன்ங்கறதால மொத்த சொத்தையும் அப்படியே என் தாத்தாவுக்கு எழுதி வைச்சிட்டாரு என் பாட்டனாரு, என்ன ஒரே ஒரு விசயத்தை மட்டும் சொல்லிட்டுப் போனாருன்னா ஆண் வாரிசு பிறந்தாதான் சொத்தை தரனும், பெண் பிறந்தா சொத்துல உரிமையில்லைன்னு என் பாட்டன் என் தாத்தாகிட்ட சொல்லிட்டுப் போய்ட்டாரு, பாட்டன் பேச்சைக் கேட்ட என் தாத்தாவும் உயில் எழுதறப்ப இந்த ஒரு விசயத்தையும் சேர்த்து எழுதிட்டு செத்தாரு. தாத்தாவோட முதல் பையன் அதான் எங்கப்பன் பேரு துரை, அடுத்த பையன் பேரு செங்கோடன், 3வது பையன் பேரு கந்தப்பன்” என சொல்ல ஜீவா திகைத்தான்
”அப்படி பார்க்காத கந்தப்பன் என் சித்தப்பாதான், சக்தியோட அப்பாதான் கந்தப்பன்”
”அடப்பாவி சக்திக்கு யாருமில்லைன்னு சொன்னியே”
”எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருந்தது ஜீவா, என் சித்தப்பா சக்தியை தன் பொண்ணா ஏத்துக்கலை அதனால நாங்க அவர் இருக்கறதையே உன்கிட்ட மறைச்சிட்டோம்”
”அப்போ சக்தியோட அம்மா”
“அவங்க ரொம்ப நல்லவங்க, பேரு சுமதி, அன்பானவங்க, பொறுப்பானவங்க ஆனா அவங்களை என் அம்மாவுக்கும் பிடிக்காது, என் சித்திக்கும் பிடிக்காது அதான் செங்கோடன் சித்தப்பா மனைவிக்கும் பிடிக்காது, என் தாத்தா முதல்ல பிறந்த 2 ஆம்பளை பிள்ளைகளுக்கு பெரிய இடத்துல பொண்ணு பார்த்து கட்டி வைச்சாரு ஆனா. அவங்க மருமகளா வீட்டிற்கு வந்ததில இருந்து ஆடம்பரமா திமிரா இருந்தாங்க, யார் பேச்சயும் கேட்கலை அதனால கந்தப்பன் சித்தப்பாவிற்கு ஏழை பொண்ணா பார்த்து கட்டி வைச்சாரு, அப்பதானே வீட்டோட அவங்க அடங்கியிருப்பாங்க
அதே போல சுமதி சித்தியும் வீட்டோட அடக்கமா இருந்தாங்க, எல்லா வீட்டு வேலைகளையும்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.