(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"சரி, விவேக் விஷயத்தை விடுவோம். ஏன் பாரதி, உன் கல்யாணம் எப்போ? லவ் அப்படி ஏதாவது??" என்று 'பர்சனல்' விஷயங்களை கேட்டாள் கற்பகம்.

  

பாரதி அதற்காக முகம் சுளிக்கவில்லை! இயல்பாக,

   

"இல்லை மேடம், எனக்கு கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை..." என்றாள்.

   

சரியாக பாரதி பேசும் போது அங்கே வந்த பவித்ராவின் காதில், பாரதி சொன்ன பதில் விழுந்தது. 

  

"நம்பிக்கை இல்லையா? அடிப் பாவி! அவள் சொல்வதை நீங்க நம்பாதீங்க மேடம். அவளுக்காக நானும், அவரும் சல்லடை போட்டு மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம்..." என்று கற்பகத்திடம் சொன்னாள் பவித்ரா!

  

"ஓஹோ!" என்றாள் கற்பகம் யோசனையுடன்!

  

"இந்த பாரதி மேடம்க்கு பிடித்த மாதிரி இன்னும் யாரும் மாட்டலை... ஆனால் வரும் வருஷத்திற்குள் எப்படியாவது இவளை யார் தலையிலாவது கட்டி விட வேண்டியது தான்..." என்று பவித்ரா பாரதியை பார்த்து கண்ணை உருட்டிக் கொண்டே சொல்ல, பாரதி தோழியைப் பார்த்து முறைத்தாள்.

  

"யார் தலையிளாவது கட்ட நான் என்ன ஆடா மாடா?"

  

"அது போல் ஏதாவதா இருந்தால் பரவாயில்லையே... நீ தான் பாரதி ஆச்சே!!!”

  

பவித்ரா சொன்ன விதத்தில், மற்ற மூவருக்கும் சிரிப்பு வந்தது. சிரித்து முடித்த உடன், கற்பகம்,

  

"பாரதி, உனக்கு கூட பிறந்தவர்கள், அண்ணா, அக்கா, இப்படி யாராவது இருக்காங்களா?" என்று

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.