(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சரி, அந்தப் பொண்ணு யார்ன்னு உனக்கு தெரியுமா, கண்ணம்மா...?"

  

"ம்ம்ம்ம்.... வந்து... இது எல்லாம் என்னோட ஊகம்... சஞ்சீவ் காதலிக்கிறது... அந்தப் பொண்ணு...."

  

சொல்லாமல் இழுத்தவளை அதிசயமாக பார்த்த ராஜீவ்,

  

"என்கிட்டே சொல்ல என்னடா உனக்கு இவ்வளவு தயக்கம்? சீக்கிரம் சொல்லு...." என்றான்.

  

"அந்த பொண்ணு வேற யாரும் இல்லை... இந்து தான்...."

  

பட்டென்று சொல்லிவிட்டு கணவனின் முகத்தை ஆவலுடன் பார்த்தாள் கீதா. ராஜீவ் விசில் அடித்தான்.   

  

"இதை நான் எதிர்பார்க்கவே இல்லை தான்... அது தானா சார் இந்து பத்தி என்கிட்டே அவ்வளவு கேட்டாரு..... ஓஹோ..."

  

"என்னங்க கேட்டாரு?"

  

"அவன் எதுவும் ஸ்பெசிஃபிக்கா கேட்கலை... பொதுவா பேசுற மாதிரி பேசி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கிட்டான்..."

  

"எல்லா விஷயமும்?????"

  

"இந்துவோட நின்னுப் போன கல்யாணம், நந்தினி பத்தி... இப்படி எல்லாம்...."

  

"ஓ..."

  

"அது இருக்கட்டும், இந்துக்கு சஞ்சீவ் மேல இன்டெரெஸ்ட் இருக்கா?"

  

"அவள் அப்படி எதுவும் சொல்லலை. ஆனால், எனக்கு என்னவோ அவளுக்கும் சஞ்சீவை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.