(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் செல்லமாக அவள் விரல்களை கடிக்கவும்,

  

ஆ... வலிக்குது...” என்று கையை விடுவித்துக் கொண்டு, அவனை நிமிர்ந்து நேராகப் பார்த்தாள்.

  

ஹப்பா, ஒரு வழியா என்னை நேரா பார்த்தீயா? சாரி டா... இன்னமும் நீ என் மனைவி ஆகிவிட்டாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை... அதான்...”

  

பேசியபடி பாரதியின் அருகில் இன்னமும் நெருங்கி அமர்ந்தவனின் கரம் இப்போது பட்டு போன்ற அவளின் கூந்தலை வருடியப் படி இருந்தது.

  

என்ன லாங் ஹேர் உனக்கு... சூப்பர்ப்... வாவ், என்ன வாசனை... பூ வாசனையா உன்னுடைய கூந்தல் வாசனையான்னு எனக்கும் கூட சந்தேகம் வருது...”

  

பாரதி சூடி இருந்த பூவை வாசனை பிடித்தப்படி விவேக் பேசவும், பாரதி சிலிர்த்து, வெட்கத்தில் அமைதியாக இருந்தாள்.

  

ஏன் ரதி, இந்த ஜடை பின்னவே அஞ்சு நிமிஷமாவது ஆகாது?”

  

கேட்டப்படி அவனின் கரங்கள், இதமாக பின்னியிருந்த கூந்தலை, விடுவிக்க துவங்கியது...

  

ரதியா?”

  

ம்ம்ம்... என் மேல் கோபம் இருந்தாலும் விஸ்வநாதன் அங்கிளுக்காக என்னிடம் வந்து சாரி சொன்ன பார், அப்போதிருந்து உன்னை மனதில் இப்படி தான் கூப்பிடுவேன்...”

  

பாரதி எதுவும் சொல்லாமல் விவேக்கையே பார்த்தப்படி இருந்தாள். அவள் கண்களை நேராக பார்த்தவன்,

  

நிஜம் ரதி. உன்னைத் தவிர என்னை வேறு யாரும் இப்படி கவர்ந்தது இல்லை...”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.