(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ஆனால், ஏன்?” என தன் மனதில் இருந்த கேள்வியை அவனிடமே கேட்டாள் பாரதி.

  

நீயே கெஸ் செய்யேன்...”

  

ப்ளீஸ் சொல்லுங்க...”

  

அப்போது அருகே இருந்த மேஜை மீதிருந்த விவேக்கின் செல்ஃபோன் சத்தமாக அலறியது. இந்த நேரத்தில் யார் என்று எரிச்சலோடு அதை கையில் எடுத்தவன்,

  

அண்ணி...” என்று மனைவியிடம் சொல்லி விட்டு, ஃபோனில்,

  

சொல்லுங்க அண்ணி, அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்றான்.

  

விவேக், பாரதி கிட்ட ஃபோனைக் கொடேன்...”

  

என்கிட்டேயே சொல்லுங்க, பரவாயில்லை...”

  

ஏன் நான் பாரதி கிட்ட சொன்னால் என்ன?”

  

அண்ணி, நல்ல நேரம் கிடைச்சது உங்களுக்கு விளையாட! அவக் கிட்ட ஃபோனைக் கொடுக்கிறேன்... ஆனால் ஸ்பீக்கர் ஆன் செய்றேன்... எனக்குத் தெரியாமல் அப்படி என்ன பெரிய ரகசியம்?”

  

சொன்னப்படி ஸ்பீக்கர் ஆன் செய்து பாரதி பக்கம் செல்ஃபோனை நீட்டினான் விவேக். அதை கையில் வாங்கி,

  

சொல்லுங்க உமா...” என்றாள் பாரதி.

  

சாரி பாரதி, பால் டம்பளர் கொடுத்து அனுப்ப மறந்துட்டோம், கொஞ்சம் வெளியே வர முடியுமா, நான் எடுத்து வந்து தரேன்...“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.