(Reading time: 9 - 18 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அது என்னவோ சரி அத்தை. விவேக் மட்டும் வித்தியாசம்...”

  

கற்பகம் உமாவிற்குப் பதில் சொல்லாமல் பாரதியை பார்த்தாள். பாரதியின் முகத்தை பார்த்தே அவளின் பசியை புரிந்துக் கொண்டாள். ஒரு ஐடியா தோன்றவும்,

  

பாரதி, விவேக் வர வரைக்கும் நீ வெயிட் செய்துட்டு இருக்காம, அவனுக்கு ரூம்லேயே எடுத்துப் போய் கொடுத்துட்டு, நீயும் அங்கேயே சாப்பிட வேண்டியது தானே?” எனக் கேட்டாள்.

  

இல்லை அத்தை, அவர் முக்கியமான மீட்டிங்ன்னு சொன்னார்...” என்றாள் பாரதி.

  

மீட்டிங் முக்கியம் தான். ஆனால் அதற்காக சாப்பிடாமல் இருக்கனும்னு இல்லையே. அவனுக்கு கொடுத்துட்டு நீ அங்கேயே இருந்து சாப்பிடு. அது பிடிக்கலைனா இங்கே வந்து சாப்பிடு... எவ்வளவு நேரம் இப்படி பசியோட இருப்ப???”

  

ஆமாம் பாரதி, காலேஜ்ல இருந்து வந்தப் போதே பசிக்குதுன்னு சொன்னீயே, அவருக்கு எடுத்துட்டுப் போய் கொடுத்துட்டு, நீயும் சாப்பிடு... விவேக்கை டிஸ்டர்ப் செய்யாமல் பார்த்துக்கோ,” என்று கற்பகத்தை ஜாடையாக காட்டியப்படி சொன்னாள் உமா.

  

பாரதி ஒப்புக் கொண்டு இரண்டு தட்டையும் கையில் எடுத்துக் கொண்டு அவர்களின் அறைப் பக்கம் சென்றாள்.

  

கற்பகம் உமா செய்த ஜாடையை கவனிக்க தான் செய்தாள், ஆனாலும் கண்டுக் கொள்ளாமல் இருந்தாள்!

  

🌼🌸❀✿🌷

   

பாரதி மாடியில் இருந்த அவர்களின் அறைக்குள் வந்தப் போது விவேக் மும்முரமாக ஏதோ கேள்வி கேட்டு கொண்டிருந்தான். அவனின் குரலின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டு அவள் வர, அறையினுள் வந்த மனைவியை கண்களை விரித்து பார்த்தான் விவேக்! அவனின் பார்வையை கவனித்து சிரித்து விட்டு, சாப்பிட கொண்டு வந்திருப்பதை ஜாடையாக

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.