”விளையாடாத இது தாலி விளையாட்டு பொருள் இல்லை இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா”
”ஓ தெரியுமே 7 முறை என் கல்யாணம் நின்னதிலிருந்தே தாலிக்கு இருக்கற மகத்துவம் எனக்கு நல்லாவே தெரியும்“
”தெரிஞ்சுமா இப்படி பேசற, உனக்கு நடந்த அநீதிக்கு இது தீர்வாகாது”
”ஆனா இதைதவிர வேற வழியில்லை”
”வேற வழியை நிதானமா யோசிச்சி பார்க்கலாம், அவசரப்பட்டா ரெண்டு பேரோட வாழ்க்கையும் கேள்விக் குறியாயிடும்”
”இப்பவே என் வாழ்க்கை கேள்விக்குறியாதான் இருக்கு, அதுக்கு பதில் உன்கிட்டதான் இருக்கு, இப்ப நீ இந்த தாலியை எனக்கு கட்டலைன்னா நிச்சயம் இங்க ஒரு மரணம் நிகழும் ஒண்ணு நீயா இருப்ப இல்லைன்னா என் அப்பாவா இருப்பாரு இல்லைன்னா நானாகூட இருக்கலாம் அது தேவையா சொல்லு”
”ஆனாலும்” என இழுக்க அவனது கழுத்தில் அருவாளின் அழுத்தம் அதிகமானது, சின்ன கீறல் கூட விழுந்தது அவனோ அவளை விக்கித்துப் பார்த்தான்
”கட்டு”
”முடியாது”
”இப்ப நீ கட்டப்போறியா இல்லை உன் தலையை வெட்டிட்டு நான் என் வாழ்க்கையை சூன்யமாக்கிக்கவா”
”உனக்கு இந்த பிடிவாதம் வேணாம் சொன்னாக்கேளு”