(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அவளை பயமுறுத்தியது லேசாக அவளின் கை உதறல் எடுக்க அதைக் கவனித்தவன் சட்டென தன் நாய்களை பார்த்து கையால் சைகை செய்து அவைகளையும் அமைதியாக்கினான். இப்போது அவ்விடமே அமைதியாக இருந்தது.

  

அவளுக்கும் நிம்மதியாக இருந்தது உடனே அருவாளை அவனது கழுத்தில் இன்னும் நன்றாக அழுத்தி பிடித்தாள். அவனோ

  

”என்னை கொல்றதால உனக்கு எதுவும் கிடைக்காது, உன் பிரச்சனை எனக்கு இப்பதான் தெரியுது ஆனா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என் மேல இருந்த பாசத்தில யார் யாரோ உன் கல்யாணத்தை நிப்பாட்டியிருக்காங்க, எனக்கு அதெல்லாம் தெரியாது, நடந்த தப்பை சரியாக்க ஒரு வாய்ப்பு கொடு, நானே கிட்டயிருந்து உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்னை நம்பு” என பேச பேச அவளோ அவனின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தாள், அதே சமயம் அவளின் தந்தையின் பேச்சு நினைவில் வந்தது, எங்கே தந்தை தன் உயிரை மாய்த்துக் கொள்வாரோ அல்லது கோபத்தில் இவனது உயிரை மாய்த்துவிட்டு தன்னை அநாதையாக்கிவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவாரோ என்ற பயம் அவளை வாட்டியது. பயம் அவளின் கண்ணில் தெரிந்தது, அவள் பயப்படுகிறாள் என அறிந்த கொம்பனோ

  

”பயப்படாத நான் உன்னை தண்டிக்க மாட்டேன்”

  

என சொல்ல அவளுக்கு கோபம் வந்தது

  

”நீயார் என்னை தண்டிக்கறதுக்கு, நீதான் தண்டிக்கப்பட வேண்டியவன் எனக்கு நடந்த அநீதிக்கு உனக்கு தக்க தண்டனை கிடைக்கனும்”

  

”தண்டனையா, எனக்கா, உன்னால என்ன தண்டனையை தரமுடியும், நானே சந்நியாசியா ஆகப் போறேன், இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன், நான் இங்க இருக்கறதாலதானே உன் கல்யாணம் நிக்குது, நான் இல்லைன்னா கண்டிப்பா உன் கல்யாணம் நடக்கும் உன் அப்பா கிட்ட சொல்லி வேறொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துக்க உனக்கு நடந்த அநீதிக்கு இதுதான் தீர்வு“ என சொல்ல அவளோ

  

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.