(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”எனக்கு நினைவு தெரிஞ்சி நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை, என் பேரை சொல்லிக்கிட்டு யார் என்ன செய்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை” என சொல்லிக் கொண்டே வந்தவனின் கழுத்தில் அருவாளை வைத்து தடுத்து நிறுத்தினாள் காவேரி. அதற்காக அவனை வெகுவாக நெருங்கியிருந்தாள். அருவாளுடன் நின்றவளைக் கண்டு திடுக்கிட்டான், அவனுக்கு அந்த அருவாளை தள்ளிவிட்டு செல்வது பெரிய கடினமான விசயம் இல்லை ஆனால், அதை செய்ய அவன் கை மறுத்தது. இருவரின் கண்களும் ஒன்றுடன் ஒன்று சங்கமித்தது. கர்ஜனையுடன் வந்தவன் அவளின் ஒரு பார்வையில் அடங்கி போனான்.

  

”இதுக்கு மேல நீ எதையாவது பேசின, அருவாளை வைச்சி உன் கழுத்தை அறுத்துட்டு போய்கிட்டே இருப்பேன்” என மிரட்டினாள், அதைக்கேட்டு அவனே கண்கள் அகல விரித்து ஆச்சர்யப்பட்டான், அவனிடம் துளியும் பயமில்லை.

  

சண்முகமோ நடப்பதைக் கண்டு விக்கித்துப் போனார்

  

”அம்மாடி என்னம்மா செய்ற, நீ ஏன் அவன் கழுத்தை அறுக்கனும், அந்த அருவாளை என்கிட்ட கொடு, நான் அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன் கொடும்மா அந்த அருவாளை கொடும்மா” என வாங்க வந்தவரைக் கூட கோப பார்வையில் தடுத்து நிறுத்தினாள் காவேரி, மகளின் அந்தப் புதிய பார்வை அவரை கலங்க வைத்தது, தன் தவறை உணர்ந்தார் அடுத்து என்ன செய்வது என புரியாமல் திகைத்தார்.

  

கொம்பனோ அவள் வைத்த அருவாளின் உறுதியை கணிக்க எண்ணி அதை ஆட்டிப் பார்த்தான், அவள் திடமாக வைத்திருந்தாள் அவளின் கை உறுதியை எண்ணி அந்நேரமும் அவன் அவளை மனதுள் பாராட்டினான்.

  

கொம்பனின் தாய் தந்தை சொந்த பந்தங்களோ கூச்சலிட்டார்கள், அவர்களை தனது ஒரு கை அசைவின் மூலம் தடுத்து அமைதியாக்கினான் கொம்பன், அதில் அவர்களும் அமைதியானார்கள்.

  

நாய்கள் மட்டும் வளர்த்த பாசம் காரணமாக குரைத்துக் கொண்டிருக்க, அந்தச் சத்தம்

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.