(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”ஏன் மனசு தடுமாறுதோ”

  

”நாக்கடிக்கி பேசு, இல்லைன்னா நாக்கை வெட்டிடுவேன், என்னை மதிச்சி பேசறதாயிருந்தா அவகிட்ட பேசலாம், அவள் வந்ததில இருந்து என்னை இளப்பமா பார்த்து நக்கலா பேசி வைக்கறா, எனக்கு அது பிடிக்கலை, அதான் அப்படி சொன்னேன்”

  

”வேணும்னா உங்க முறைபொண்ணுகிட்ட பேசி உங்ககிட்ட ஆசையா பேச சொல்லவா”

  

”ஒண்ணும் தேவையில்லை என் ஆளுங்க சுத்தியிருக்கற இடத்தில எனக்கு அவமானம் வந்துடக்கூடாதுன்னு பார்க்கிறேன், இவள்கிட்ட எதுக்கும் எச்சரிக்கையா பேசனும்” என சொல்லியவன் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு மோட்டார் அறை நோக்கிச் சென்றான்.

  

அதற்குள் சண்முகம், கொம்பனின் தாய் தந்தை மற்றும் அவனது சொந்த பந்தங்களிடம் பெரிய ரகளையே செய்துவிட்டார், தன் மகளின் திருமணம் ஒவ்வொரு முறையும் நின்று போனது கொம்பனால்தான் என பழி போட்டார், அதைக் கேட்ட சொந்தங்களுக்கோ தர்மசங்கடமாகிப் போனது, சண்முகத்தை சமாதானம் செய்ய யாராலும் இயலவில்லை. அவரும் தனது கோபத்தை பெருக்கிக் கொண்டே சென்றார். வாய்க்கு வந்தவற்றை பேசினார், கொம்பனை திட்டோ திட்டென திட்டினார், அவரின் பேச்சு கொம்பனுக்கே கேட்டது அவனும் அவர் பேச்சை நிதானமாக கேட்டு ஓரளவுக்கு புரிந்துக் கொண்டான்

  

”அடப்பாவிங்களா இந்த ஊர்மக்களுக்கு நாம நல்லது செய்தா அவங்க எனக்கு இப்படியா கெடுதல் செய்யனும், நான் எப்ப என் முறைப்பொண்ணை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டேன், இவனுங்களா எதுக்கு என்னை குடும்ப வாழ்க்கையில தள்ளப் பார்க்கறாங்க, முடியாது இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன், என்ன ஆனாலும் சரி நான் சந்நியாசி ஆகப் போறது உறுதி” என உறுதியுடன் உடைகளை மாற்றிக் கொண்டு வழக்கம் போல் அணியும் வெள்ளை வேட்டி சட்டையை அணிந்துக் கொண்டு கித்தாய்ப்பாய் வந்து நின்றான். அவனது தோரணை அப்படியே மாறியிருந்தது, பக்தி உடையில் பவ்யமாக இருந்தவன் இந்த உடையில் திமிரெடுத்த காளை போல நின்றான். வந்ததும் வராததுமாக

  

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.