(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இருக்கும் சொத்தை உயில் எழுத ஒரு வக்கீல் இருந்தான் அவருக்கு பக்கத்தில் கொம்பன் வீட்டுக்கு உரித்தான ஆஸ்தான கணக்குபிள்ளை இருந்தான், வயதில் கொம்பனை விட ஒரு வயது மூத்தவன் என்றாலும் இருவரும் நண்பர்கள் போலவே பழகிவந்தார்கள், அடுத்து அவனுக்கு பக்கத்தில் இவன் எப்படி நாய்களை வளர்த்து ஆளாக்குவானோ அதே போல வேலையை செய்பவன் இருந்தான், கொம்பன் சந்நியாசியாகி காசிக்கு சென்றால் இங்கிருக்கும் அவன் வளர்த்த நாய்களை யார் வளர்ப்பார்கள், அதனால் அவைகளை கொண்டு செல்ல ஒரு லாரியுடன் தயார் நிலையில் காத்திருந்தான், இது போக தன் மகன் சந்நியாசி ஆகிவிடக்கூடாதென பரிதவிக்கும் அவனது தந்தை தாய் சொந்த பந்தம் உள்பட அனைவரும் அங்கு இருந்தார்கள்.

  

காவேரி வந்ததைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள், அவளுக்கு பின்னால் சண்முகம் வந்து சேர்ந்தார், அதற்கே அவருக்கு மூச்சு வாங்கியது. காவேரியிடம் வந்து அவளின் தோளில் ஆதரவாக கை வைத்தபடி இழுத்து இழுத்து மூச்சு வாங்க அவளோ அவரின் இன்னொரு கையில் இருந்த அருவாளை தன் கையில் வாங்கிக் கொண்டு அவரை அங்கிருந்த ஒரு கல்மேட்டில் அமர வைத்துவிட்டு கொம்பன் முன் வந்து நின்றாள்.

  

கொம்பனோ அன்று இரவே தனது அனைத்து சொந்த பந்தம் சொத்து சுகம் அனைத்தையும் விட்டுவிட்டு சந்நியாசியாக முடிவெடுத்து காவி வேட்டியில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் நெற்றியிலும் உடலில் ஆங்காங்கிலும் பட்டை பட்டையாக விபூதியை பூசிக் கொண்டு கண்களில் ஒரு தீட்சண்யமான பார்வையை வீசினான். காவேரியோ கையில் அருவாளுடன் அவனை ஏற இறங்கப் பார்த்து ஒரு நொடி நிதானித்தாள் பக்திமானாக இருப்பவனை எப்படி திட்டுவது என்ற எண்ணம் வர குழம்பினாள். அவளின் குழப்பத்தைக் கண்ட கொம்பனோ டிரைவரைப் பார்த்து என்ன என்பது போல் சைகை செய்ய அவனோ தலையை சொறிந்தபடி தெரியாது என சைகை செய்ய கொம்பனுக்கு அலுப்பே வந்தது.

  

”எந்த சொந்தமும் வேணாம்னு நினைக்கறப்ப திடுதிப்புன்னு வானத்தில இருந்து இறங்கி வந்த தேவதை போல ஒரு முறைபொண்ணு நமக்கு தேவையா, சே சே நம்மளோட லட்சியம் ஒண்ணுதான் அந்த ஈஸ்வரனுக்கு தொண்டாற்றி முக்தியடையனும், ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய” என மனதில் நினைத்தபடியே அவளைப் பார்த்து தொண்டையை செருமினான் அந்த சத்தம் கூட நாராஸமாக கேட்டது காவேரிக்கு, அதற்கே

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.