(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அப்பா”

  

”நீ அமைதியா இரு, இன்னிக்கே உன் வாழ்க்கை மாறப்போகுது”

  

”அதுக்காக நீங்க கொலைகாரன் ஆகனுமா உங்களால கொம்பனை கொல்ல முடியுமா”

  

”முடியலைன்னா என்னோட கையாலாகாத தனத்தை நினைச்சி என்னை நானே அழிச்சிக்குவேன்”

  

”அப்புறம் நான் அநாதையாயிடுவேன்பா என்னைப் பத்தி நீங்க யோசிக்க மாட்டீங்களா”

  

”அந்த சாமி உன்னை காப்பாத்தும் நீ கவலைப்படாத” என்றவர் டிரைவரைப் பார்த்து

  

”என்ன வேடிக்கைப் பார்க்கற வண்டியை கொம்பன் இடத்துக்கு விடு” என கட்டளையிட டிரைவருக்கு இப்போது கவலை அதிகரித்தது, பலத்த யோசனையுடனே வண்டியை கொம்பன் இருக்கும் இடம் நோக்கி விரட்டினான்.

  

காவேரியோ மீண்டும் தன் தந்தையை சமாதானமாக்க முயன்றாள், அவரோ பிடித்த பிடியில் உறுதியாக இருந்தார். அவரின் உறுதியை நினைத்து மனம் கலங்கினாள், தன் வாழ்க்கை நாசமாவது கூட அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை, தன் தந்தையை தவறான முடிவில் இருந்து காப்பாற்ற வேண்டும், அவர் கொலைகாரன் ஆக கூடாது அதே போல அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் கூடாது, அதற்கு என்ன வழி என்ன வழி என அவள் சிந்திக்கையில் அவளின் கையில் இருந்த தாலியை அழுத்தினாள், அது அவளுக்கு வலியைத் தந்தது, அதைப் பார்த்தாள் வெறுத்தாள், ஆனாலும் தூக்கியெறிய மனம் வரவில்லை, குழம்பிய அவளுக்கு அந்த தாலியைக் கண்டதும் வழி தெரிந்தது, மனம் தெளிந்தாள், முகமும் இயல்புக்கு வந்தது, திடமாக இருந்தாள், கண்ணீரைத் துடைத்தபடி கொம்பனை எதிர்கொள்ள சித்தமானாள்.

  

அரை மணி நேர பயணத்திற்கு பின் கொம்பன் இருக்கும் இடம் வந்தது. அவனது வீடு ஒரு

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.