(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அப்ப பேசாம இரு”

  

”என்னையே அடக்கு, ஆமா இவளை என்ன செய்யப் போற”

  

”இவள் எதுக்கு வந்தாள்ன்னு தெரிஞ்சாதானே ஏதாவது செய்றதுக்கு”

  

”அவளை பாரு கல்யாண பொண்ணு போல வந்திருக்கா, ஒருவேளை அவள் கல்யாணத்தை நீதான் நிப்பாட்டினியா”

  

”அட ஏன்டா நானே இப்பதான் இவளை பார்த்தேன்னு சொல்றேன், நாளைக்கு நான் சந்நியாசியா ஆகப்போறேன், அப்ப எதுக்காக இவள் கல்யாணத்தை நான் நிப்பாட்டறேன், கூறுகெட்ட தனமா பேசி வைக்காத, உன் மேல நாய்களை ஏவிவிட்டுடுவேன்”

  

”சரி சரி இது உன் குடும்ப விவகாரம், இதுல நான் தலையிடலை, எத்தனையோ பஞ்சாயத்தை தீர்த்து வைச்சிருக்க, இந்த பஞ்சாயத்தையும் விசாரிச்சி தீர்த்து வைச்சிடு, இதுதான் நீ செய்ற கடைசி பஞ்சாயத்து, அதனால அந்த புள்ளை என்ன கேட்டாலும் தட்டாம செய்து வை”

  

”அப்படிங்கற”

  

”ஆமாம்ங்கறேன் பாரு பாரு அவள் உன்னையே ஆசையா பார்க்கறா”

  

”யாரு அவளா, எவ்ளோக்கு எவ்ளோ கேவலமா பார்க்க முடியுமோ அவ்ளோக்கு அவ்ளோ என்னை கேவலமா பார்த்து வைக்கறா”

  

”ஓ அப்படியா சாரிப்பா உன் கூட இருந்து இருந்து பொண்ணுங்க என்ன செய்வாங்க, எப்படி பார்ப்பாங்கன்னு கூட என்னால புரிஞ்சிக்க முடியலை”

  

”பொண்ணுங்களை பத்தி என்கிட்ட பேசாத, நான் ஒரு கட்டபிரம்மசாரியாக்கும்”

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.