குனி” என்றாள் அது அவனுக்கே ஆச்சர்யம்
”நானா தலையை இறக்கறதா ஒருக்காலும் முடியாது நான் நிமிர்ந்துதான் இருப்பேன்” என்றான் வீரமாக தனது மீசையை முறுக்கியபடி அதில் அவளுக்கு கோபமே வந்தது, சட்டென அந்த மீசையை பிடித்து இழுக்க அவனோ அலறினான், அவனை அலற விட்டபடியே தலையை இறக்கி வைத்தாள், அவனது தலை குனியவும் உடனே மாலையை அவனது கழுத்தில் போட அவனோ கோபமாக அவளை முறைத்தபடியே அவளுக்கு மாலையை அணிவித்துவிட்டு தனது மீசையை பாசமாக நீவிவிட்டான் வலி போல
”போதும் போதும் மீசைதானே அப்படியோ துடிச்சிப் போற தாலியை கட்டு” என்றாள் மிரட்டலாக
”பொறும்மா ஆம்பளைக்கு வீரமே மீசைதான், இப்படியா பிடிச்சி இழுப்ப என் மீசையில இதுவரைக்கும் யார் கையும் பட்டதில்லை தெரியுமா, இந்த வீரனை இப்படியா சாச்சி வைப்ப”
”ஒழுங்கா நீ தலைகுனிஞ்சிருந்தா இந்த அவமானம் உனக்கு நேர்ந்திருக்குமா, உன்னால எனக்கு வந்த அவமானத்தை விட இது ஒண்ணும் பெரிசில்லை ரொம்ப அலட்டிக்காத”
”நீதான் அலட்டிக்கிற தெரிஞ்சோ தெரியாமலோ உனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் காரணமானதால பொறுத்துப் போறேன் இல்லைன்னு வையேன்”
”என்னடா செய்வ”
”என்ன டாவா ஏய் முறைப்பொண்ணே பார்த்து பேசு”
என சொல்ல அவளோ
”அந்த அருவாளை கொடு” என்றாள் மிரட்டலாக உடனே கணக்கு பிள்ளை அருவாளை அவளின் கையில் தர அவளோ அதை வாங்கி மீண்டும் அவனது கழுத்தில் வைத்தாள் அவனோ அலட்சியமாக பார்த்து