என சொல்ல அவனும் 3 முடிச்சிட்டு முடித்துவிட்டு மற்றவர்களை பார்த்தான். சண்முகத்தை தவிர மற்ற அனைவருமே சந்தோஷமாக இருந்தார்கள்.
”ஐயர் முன்னாடி கல்யாணம் ஆனதை பார்த்திருக்கேன், முதல் முறையா அருவாள் முன்னாடி கல்யாணம் ஆனதை இன்னிக்குதான் பார்க்கிறேன்” என்றான் கணக்குபிள்ளை அதைக்கேட்ட கொம்பனோ அவளைப் பார்த்தான், அவளின் கண்கள் கலங்கியிருந்தது அருவாளை தரையில் விட்டெறிந்தாள் தன் தந்தையைப் பார்த்து
”அப்பா” என அழைக்க அவரோ
”உன் வாழ்க்கையை நீயே அழிச்சிக்கிட்டியேம்மா”
”உங்களை நான் காப்பத்திட்டேன்பா, எனக்கு இது போதும்”
”சரி வாம்மா வீட்டுக்குப் போகலாம்” என அழைக்க அவளும் சரியென்றாள், கொம்பன் கூட அமைதியாக நின்றான் ஆனால் அவனின் முழுக்குடும்பமே காவேரியை தங்கள் வீட்டு மருமகள் என உரிமை பாராட்டிக் கொண்டு வந்து நின்றது. சண்முகம் ஒப்புக் கொள்ளவில்லை, மறுத்தார், காவேரியும் அதே போலதான், யார் என்ன சொன்னாலும் கொம்பன் வீட்டிற்கு வரப்போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தாள், மற்றவர்களும் விடாமல் பேசிப் பார்த்தார்கள், பலனில்லை முடிவில் அவளின் வழிக்கே வந்தார்கள், இதில் சண்முகம் முகம் மலர்ந்தார் கொம்பனோ திடுக்கிட்டான்
”என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா நானா முடியாது நான் போகமாட்டேன்” என கூப்பாடு போட்டு கதறினான், அலறினான், அது யார் காதிலும் விழவில்லை, எப்படியாவது அவனை சந்நியாசத்தில் இருந்து சம்சாரியாக்க வேண்டும் என்ற முயற்சியில் அவனது குடும்பமே இறங்கியிருந்தது. அனைவருமே காவேரி பக்கம் சாய்ந்துவிட்டார்கள், கடைசியில் சண்முகம் ஜெயித்தார் தன் மகளின் கையை ஒரு பக்கமும் கொம்பனின் கையை மறுபக்கமும் பிடித்துக் கொண்டு வீரா வேசமாக நடைநடந்து ஊர் அறிய ஊர்வலமாக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கொம்பனுக்கு இதில் விருப்பமில்லை வேறு வழியில்லை, அவனது குடும்பமே காவேரி பக்கம் சென்றதால் அவனது பேச்சு