(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 19 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

நெற்றி சுருங்க, கேள்வியுடன், “அஹல்யா டீச்சரா? யாரு அது?” என்றார் டாக்டர் பிரசாத்.

  

“மிடில் ஸ்கூல் மேத்ஸ் டீச்சரா இருக்காங்க. உங்க ரெக்கமென்டேஷன்ல தான் அவங்களுக்கு வேலைக் கிடைச்சதுன்னு சொன்னாங்க,” என சொல்லி அவருக்கு அஹல்யாவை நினைவுப் படுத்த முயன்றாள் சத்யா.

  

“அப்படியா?” என்று அவர் சொன்ன நேரத்தில், லிஃப்ட் கதவு திறந்துக் கொண்டது.

  

“செவன்த் ஃப்ளோர்ல ஒரு பேஷண்ட்டை பார்க்க போகனும். வாம்மா சத்யா பேசிட்டே போகலாம்,” என அவளையும் உடன் அழைத்தார் பிரசாத்.

  

“தேங்க்ஸ் டாக்டர். இவங்க என் ஃபிரென்ட் சக்தி.” சத்யா, சக்திக்கு வெகு சுருக்கமாக அறிமுகம் கொடுத்து விட்டு லிஃப்ட்டுக்குள் புகுந்தாள்.

  

“ஏதோ டீச்சர் பத்தி சொன்னீயே. எந்த டீச்சர்?”

  

“அஹல்யா டீச்சர் டாக்டர். உங்க ரெக்கமென்டேஷன்ல அவங்களுக்கு வேலைக் கிடைச்சுது.”

  

“தினமும் நிறைய பேர் ரெக்கமென்டேஷன் லெட்டர் கேட்டு வராங்க. யாருன்னு தெரியலையே!”

  

“இவங்களைப் பத்தி சவீதா கூட உங்க கிட்ட பேசினேன்னு சொன்னாங்க.”

  

“சவீதான்னா ஜான்சி ராணி சவீதாவா?”

  

“அவங்க தான் டாக்டர்!”

  

“சவீதா வந்து பேசினதுன்னா, அந்த மேத்ஸ் டீச்சர் பத்தியா கேட்குற?” என்ற பிரசாத், சத்யாவை ஒரு பார்வை பார்த்தார்!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.