(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

டாக்டர் இப்போது பேசினார்.

  

“கல்யாணம் நிச்சயம் ஆனா வந்து சொல்லும்மா.” டாக்டர் பிரசாத், சத்யாவிடம் சொல்லி விட்டு லிஃப்ட்டை விட்டு வெளியே சென்றார்.

  

“தேங்க்ஸ் டாக்டர். கட்டாயம் சொல்றேன். தேங்க்ஸ்!” சத்யா சொல்லும் போதே லிஃப்ட் கதவு மீண்டும் மூடிக் கொண்டது.

  

“இதைக் கேட்கவா வந்த சத்யா? நீ கேட்டதை வச்சு நானும் என்னவோ பெருசா ஏதோன்னு நினைச்சேன்,” என்றாள் பர்வீன்.

  

“இதுவும் பெரிய விஷயம் தான் பர்வீன். உனக்கும் தேங்க்ஸ்,” என்ற சத்யா மேலே எதுவும் சொல்லாமல் சக்தியை பார்த்தாள்.

  

அவள் அமைதியாக இருக்கவும், சத்யாவும் கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டு இருந்தாள்.

   

லிஃப்ட் மீண்டும் க்ரவுன்ட் ஃப்ளோருக்கு வந்து சேரவும், மூவரும் லிஃப்டில் இருந்து வெளியே வந்தார்கள்.

   

பர்வீன் அந்தப் பக்கம் போன உடன், “டாக்டர் நல்லவரா தான் இருக்கார் ஆனா எதுக்கு பொய் சொன்னாருன்னு தெரியலை,” என சக்தியே பேச்சை தொடங்கினாள்.

  

“முதல்ல அஹல்யா யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டு, அப்புறமா ரொம்ப தெரிஞ்சவர் மாதிரி அஹல்யா பேரைச் சொன்னாரே, அதை தான சொல்றீங்க?” எனக் கேட்டாள் சத்யா

  

“பரவாயில்லை சத்யா. கரக்ட்டா கவனிச்சிருக்க???”

  

“தேங்க் யூ சக்தி. அந்த ஒரு விஷயத்தை தவிர டாக்டர் சொன்னது எல்லாமே எனக்கு ஓகே தான்...”

  

“இருக்கலாம்!”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.