(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அப்போது மட்டும் இல்லாமல், தொடர்ந்து வந்த நிமிடங்களிலும் அதே கேள்வி தான் அவளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது.

  

🌼🌸❀✿🌷

   

மறுநாள் எப்படி போனது என்றே அஹல்யாவுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு கணமும் அபினவிடம் அவள் சொல்ல போகும் பழைய நிகழ்வுகளும், அதன் வலிகளுமே அவளின் கருத்தை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது.

  

அருணுடன் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பியப் போது, மெயில் பாக்ஸில் வெள்ளை நிற கவர் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

   

என்ன லெட்டர்?

  

கேள்வுயுடன் கையில் எடுத்துப் பார்த்தாள். அவளின் பெயரும் விலாசமும் டைப் செய்யப் பட்டிருந்தது. அனுப்பியவர் யார் என்ற தகவல் எதுவும் இல்லை.

  

கவரை கிழித்து உள்ளே இருந்த லெட்டரை வெளியே எடுத்தாள்.

  

சேகரனை இன்னும் ஞாபகம் இருக்கா அஹல்யா? 🃏 🃏 🃏

  

பிரின்ட் செய்யப் பட்டக் கொட்டை எழுத்துக்கள் அவளைப் பார்த்து சிரித்தது.

  

🌼🌸❀✿🌷

   

க்தி பிஸியா இருக்கீயா?” சத்யாவின் குரல் சக்தியின் ப்ளூடூத் ஹான்ட்ஸ்ஃப்ரீயின் வழி அலறியது.

  

“இது என்ன கேள்வி சத்யா. நான் என்ன செய்துட்டு இருப்பேன்னு உனக்கே தெரியாதா?” செடிகளுக்கு உரம் போட்டுக் கொண்டே பேசினாள் சக்தி.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.