This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ஹேர்ஸ்டைல் பார்த்து அருக்காணி வெர்ஷன் டூன்னு நினைச்சேன், பரவாயில்லை அக்காக்கு கம்யூட்டர்னா என்னன்னு தெரியுது.”
“டேய், சத்தமா சொல்லாத, கம்ப்யூட்டர் அது என்ன ஸ்கூட்டர்னு கேக்க போகுது.”
ஒருவர் மாற்றி ஒருவர் நக்கலடித்துக் கொண்டிருக்க, தமிழ்ச்செல்விக்கு கோபமாகவும் வந்தது, அழுகையாகவும் வந்தது. அப்போது,
“ஹாய்!” என நட்புடன் ஒலித்தது ஒரு பெண் குரல்.
குரல் வந்த திக்கில் திரும்பிய தமிழ்ச்செல்வி,
“ஹலோ!” என்றாள்.
“என் பேரு செரிஷா. உன் கிளாஸ்மேட். இந்த பசங்க கலாட்டாவை கண்டுக்காதே. அவங்க அப்படி பேசுவாங்க, தேவைனா ஹெல்ப்பும் செய்வாங்க!”
“எனக்கு பயமா இருக்கு!”
ஒரு நாற்காலியை இழுத்து போட்டு தமிழ்ச்செல்வியின் பக்கத்தில் உட்கார்ந்தாள் செரிஷா.
“என்ன பயம் உனக்கு? எல்லோருமே உன்னை மாதிரி மனுஷங்க. இதுல பயப்பட என்ன இருக்கு? மேடம் செய்ய சொன்ன ப்ரோக்ராமை நான் நேத்தே எழுதி ரன் செய்தாச்சு. உனக்கு ஹெல்ப் வேணுமா?”
“ஆமா, இந்த மவுஸ், கீபோர்ட்?”
“இது கார்ட்லெஸ் மவுஸ் கீபோர்ட். தனியா இருந்தாலும் கம்ப்யூடரில கனக்ட் ஆகி இருக்கும்.”
செரிஷா பொறுமையாக அந்த கம்ப்யூட்டரைப் பற்றி தமிழ்ச்செல்விக்கு விளக்கினாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.