(Reading time: 9 - 17 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

திரும்ப எனக்கு நினைவு வந்தப்போ ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். பக்கத்துல அம்மாவும், அக்காவும் அழுதுட்டு இருந்தாங்க. அங்கே இருந்த லேடி போலீஸ் ட்ரக் கொடுத்து மயக்கமா இருந்தப்போ என்னை ரேப் செய்திருக்கிறதா சொல்லிட்டு இருந்தாங்க.”

  

அஹல்யா தலையை கவிழ்த்துக் கொண்டாள். அதுவரை எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அபினவ் இப்போது அவளைப் பார்த்தான்.

  

அவன் பார்ப்பது புரிந்தாலும், நிமிர்ந்து நேராக அவனைப் பார்க்க முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டே பேசினாள் அஹல்யா.

  

“ரொம்ப அருவெறுப்பா இருந்துச்சு அபினவ். அப்படியே செத்துப் போயிட மாட்டேனான்னு கூட தோணிச்சு. அம்மா, அக்கா முகத்தை பார்க்க கூட முடியலை. என் கிட்ட அந்த போலீஸ் லேடி ஏதேதோ கேள்வி கேட்டாங்க. என்னால எதுவுமே சரியா சொல்ல முடியலை. ஒருத்தன் மட்டுமில்லை, நிறையப் பேருன்னு...“

  

மேலே பேச முடியாமல் திக்கினாள் அஹல்யா.

  

“அஹல்யா.” அவள் மடி மீதிருந்த கையை எடுத்து விரல்களை மென்மையாக பற்றினான் அபினவ்.

  

“இல்லை, உங்களுக்கு நடந்தது எல்லாம் தெரியனும் அபினவ்,” என்றாள் அஹல்யா பிடிவாதத்துடன்!

  

“முதல்ல ஆர்வத்தோட விசாரணை செய்த போலீஸ் நான் கௌரவ் பேரை சொன்னதுக்கு அப்புறம் அவ்வளவா அக்கறை காட்டலை. என் அக்காவும், அம்மாவும் அப்போவும் அதோட விட்டுடலாம்னு சொன்னாங்க. என்னால முடியலை. போலீஸ் விசாரணையை கண்டின்யூ செய்ய சொன்னேன். கேஸ் போடுவேன்னு சொன்னேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு நினைக்குறீங்க? நான் தான் சினிமா சான்ஸ்க்காக கௌரவ் கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்னு கோர்ட்ல சாட்சியோட ப்ரூவ் செய்தாங்க.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.