This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“எனக்குப் புரியலை யசோக்கா. நீங்க காலேஜ் முடிச்சு ஒரு வருஷம்னா உங்களுக்கே 22, 23 வயசு தான் ஆகி இருக்கும். அதே வயசு தானே வெற்றிக்கும்? ஏன் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம்?” என மனதில் இருந்த கேள்வியை மறைக்காது கேட்டாள் தமிழ்ச்செல்வி.
“சின்ன அத்தை மனசுக்குள்ளே குற்ற உணர்வு இருந்திருக்கும்னு நினைக்கிறேன் தமிழ். அவங்க வெற்றியை அத்தை கிட்ட விட்டுட்டு ஊருக்கு வந்தப்போ அவன் ரொம்ப சின்ன பையன். அதுக்கு அப்புறம் அவன் சின்ன அத்தையை பார்க்கன்னு கூட அதிகமா ஊருக்கு வந்ததில்லை. இந்த கல்யாண பேச்சு நடந்தப்போ அடிக்கடி அம்மா மாதிரி அன்பா, அரவணைச்சு அவனை பார்த்துக்கணும்னு என் கிட்ட சொல்லுவாங்க.”
“ஓ, சரி! அப்புறம் என்ன நடந்துச்சு?”
“வெற்றி கிட்ட என் மனசில இருந்ததை அப்படியே ஒப்பிச்சிட்டேன். சாயும் நானும் கல்யாணம் செய்துக்க ஆசைப் படுறதை சொன்னேன். இந்த கல்யாண பேச்சை என்னால நிறுத்த முடியலைன்னும் சொன்னேன்.”
“இதை அவர் கிட்ட சொன்னதுக்கு உங்க அம்மா, அப்பா கிட்ட சொல்லி இருக்கலாமே?”
“நான் சொன்னேனே தமிழ், சந்திரிகா அத்தை விருப்பத்துக்கு முன்னாலே எதுவுமே எடுபடாது!”
“சரி, வெற்றி என்ன செஞ்சாரு?”
“அவன் எனக்கு உதவ இந்த கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொன்னான்! என்னை பத்தியோ சாய் பத்தியோ ஒன்னும் சொல்லாம அவனுக்கு பிடிக்கலைன்னு சொன்னான்.”
“எரிமலை வெடிச்சிருக்கனுமே!!!”
“வெடிக்காம என்ன!! பாவம் வெற்றி நிறைய பேச்சு கேட்க வேண்டியதா போச்சு!”
“புரியுதுக்கா.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.