This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சில கண அமைதிக்குப் பிறகு, அஹல்யாவே தொடர்ந்தாள்.
“இங்கே வந்தப்போ இந்த வீட்டு சாவி என் கிட்ட கொடுத்தது சேகரன். ஏற்கனவே பட்டது போதாதா, அவன் கிட்ட இருந்து தள்ளியே இருந்தேன். அவன் அருணோட நல்லா பேசி விளையாடியதால அவன் வீட்டுக்கு வரதை தடுக்கலை. ஆனாலும் இந்த தடவையும் எனக்கு கசப்பான அனுபவம் தான் மிஞ்சிச்சு. ஒரு நாள் குடிச்சுட்டு போதையோட நடுராத்திரி வீட்டுக்கு வந்தான் சேகரன். கேவலமா ஏதேதோ பேசிட்டு என் கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். அவன் கிட்ட இருந்து தப்பிச்சு கிச்சன்ல இருந்த கத்தியை காட்டி மிரட்டி வெளியே போக சொன்னேன். அவன் போறதை உறுதி செய்துக்க வெளியே போய் நின்னு கவனிச்சேன். அதை எதிர் வீட்டுல இருக்கவங்க பார்த்தாங்க. நான் இருந்த கோலத்தையும் அவன் இருந்த நிலைமையையும் பார்த்து தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. நான் என்னன்னு அவங்க கிட்ட போய் விளக்கமா சொல்ல? அன்னைக்குப் பயந்துட்டு ஓடிப் போன சேகரன் இரண்டு நாள்ல திரும்ப வந்தான். திமிரா பேசினான். ஊருல எல்லோருக்கும் நான் அவன் கீப்ன்னு தெரியும்னு சொன்னான். இன்னும் என்னெனவோ பேசினான். நல்லா திட்டி அனுப்பினேன். இருந்தாலும் திரும்ப திரும்ப வீட்டுக்கு வரது, நடுராத்திரி வந்து சத்தம் போடுறதுன்னு செய்துட்டே இருந்தான். என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது ஒரு நாள் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் வந்து விசாரிச்சார். அப்போ தான் சேகரன் இறந்துப் போனது எனக்கு தெரிய வந்துச்சு.”
சொல்ல நினைத்தது அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு மீண்டும் அமைதியானாள் அஹல்யா.
அபினவ் இப்போதும் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் பெரிய பாவம் செய்திருக்கேன் அபினவ். நான் எங்கே போய் என்ன செய்தாலும் என்னை தேடி கெட்டவங்களும், பழியும் தான் வருது. நடிக்கனும்னு ஆசைப்பட்டேன், மானம் போச்சு! கெட்டவங்குற பேர் வந்துச்சு. எதுவுமே வேண்டாம்ன்னு தனியா வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம்னு வந்தேன். இங்கேயும் அதே தான் நடக்குது. உண்மைல எனக்கு நடந்த ஒரே ஒரு நல்லது அந்த எதிர் வீட்டுல இருக்கவங்க தான். அவங்களோட கோபம் தான் இப்போதைக்கு எனக்கு கிடைச்சிருக்க வேலி. அவங்களை தாண்டி ஒரு ஈ, காக்கா கூட எட்டிப் பார்க்க முடியாது. அதனால தான் அந்த வீட்டுலேயே இன்னும் இருக்கேன். வேற எங்கேயாவது
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.