(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

போகவே பயமா இருக்கு.”

  

அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை என்பதுப் போல அபினவின் பிடியில் இருந்த கையை விடுவித்து, தன் கைகளை மார்போடு கட்டிக் கொண்டாள் அஹல்யா.

  

அபினவ் இப்போதும் அமைதியாக இருந்தான்.

  

தொடர்ந்து ஒரு சில வினாடிகள் அமைதியில் சென்றது.

  

திடீரென, “இருட்ட ஆரம்பிக்குது கிளம்பலாமா?” என்றான் அபினவ்.

  

நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் அஹல்யா.

  

உண்மை தெரிந்தப் பிறகு அவன் கல்யாணம், காதல் என்பதை எல்லாம் மறந்து விடுவான், அல்லது பாவம் என்று பரிதாபப் படுவான் என்று எதிர்பார்த்திருந்தாள். அதற்கு மனதை தயார் செய்தும் வைத்திருந்தாள். இருந்தாலும் அபினவின் இந்த விட்டேற்றியான நடவடிக்கை அவளை பாதித்தது.

  

இதுவரை யாரிடமும் அவள் உண்மையை பகிர்ந்ததில்லை. அம்மா, அக்காவிடம் கூட முழுதாக சொன்னதில்லை. இவனிடம் மட்டும் தான் சொன்னாள். இவனும் ஒரு ஆண் தானே? இதை தவறாக பயன்படுத்திக் கொள்வானோ? சந்தேகமும், பயமும் கலக்க அபினவை பார்த்தாள்.

  

“போகலாமா?” என மீண்டும் கேட்டான் அபினவ்.

  

“சரி,” என்று அஹல்யா குழப்பத்துடனே தலை ஆட்டினாள்.

  

🌼🌸❀✿🌷

  

திர் பாராமல் வந்து நின்ற தென்றல்வாணனை பார்த்து சமையல் மேடையில் இருந்து கீழே குதித்தாள் சக்தி. தென்றல்வாணன் அவளை கோபமாக பார்த்த பார்வை சக்திக்கு புதிதாக

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.