(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இருந்தது. அவளுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் இப்படி உணர்வுகளை வெளியே காட்டுபவன் இல்லை.

  

“சத்யா, நீ டாக்டர் பிராசாத் கிட்ட போய் பேசினீயா?” தென்றல்வாணனின் குரலும் கோபத்துடனே ஒலித்தது.

  

சக்தியும் சத்யாவும் பார்த்துக் கொண்டார்கள். பின், கணவனிடம்,

  

“ஆமாங்க,” என்றாள் சத்யா அமைதியாக.

  

“எதுக்கு அஹல்யா பத்தி அவர் கிட்ட போய் கேட்ட?”

  

“அபினவ் அஹல்யாவை கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறான். டாக்டர் தான் அஹல்யா வேலைக்காக ரெகமன்ட் செய்தாருன்னு சொன்னாங்க. அதான் கேட்கப் போனேன்.”

  

“ஏன் என் கிட்ட நீ இதைப் பத்தி எதுவும் சொல்லலை?”

  

“சொல்லனும்னு இருந்தேன்ங்க. மறந்துட்டேன்.”

  

“இதோ பார் சத்யா தேவை இல்லாம எதிலேயும் தலைப் போடாதே. டாக்டருக்கு இன்னைக்கு அஹல்யா பேரைப் போட்டு மொட்டைக் கடிதாசி வந்திருக்கு. அவர் லெட்டரைக் கொடுத்துட்டு உன் மனைவியை பத்திரமா இருக்க சொல்லுன்னு என் கிட்ட சொல்றார். அவர் சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு!!!”

  

“அந்த மொட்டை கடிதாசில என்னங்க எழுதி இருந்துச்சு?” ஆர்வத்துடன் கேட்டாள் சத்யா.

  

தென்றல்வாணன் அவளைப் பார்த்து முறைத்தான்!

  

“நான் என்ன சொல்றேன், நீ என்ன கேட்குற?”

  

“இல்லைங்க, அஹல்யா பத்தி இருந்துச்சுன்னு சொன்னீங்களே அதனால கேட்கிறேன்.”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.