(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

அதைப் பற்றி அவள் யோசிக்கும் முன்னே சாத்தி இருந்த அவளுடைய அறைக் கதவு திறந்தது!

  

இருட்டில் கரிய வரி வடிவமாக தெரிந்த ஒரு உருவம் உள்ளே வந்தது.

  

யாரிந்த நெட்டை கொக்கு? என்று யோசித்த சக்தி, அதற்கு பதில் கண்டுப்பிடிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல், தன் வலது கைவிரல்களை மடித்து அந்த உருவத்தை நோக்கி குத்தினாள்.

  

சரியாக அதன் பின்னந்தலையில் அந்த குத்து விழுந்தது.

  

இடியென அப்படி ஒரு அடி விழும் என்று எதிர்பார்த்திராததால் தடுமாறிய உருவம் சுதாரிக்கும் முன் அடுத்தடுத்த குத்துக்கள் விழுந்தது.

  

“ஹாவ்!” வலியில் சத்தம் போட்டு கீழே விழுந்தது உருவம்.

  

“ப்ளீஸ் ப்ளீஸ் ஸ்லோ டவுன். அடிக்காதீங்க!” அந்த ஆண் குரலில் வலி தெரிந்தது.

  

“யாருடா நீ? எதுக்குடா உள்ளே வந்த?” போலீஸ் பாணியில் கேள்விக் கேட்டு, மல்யுத்த வீராங்கனைப் போல கீழே விழுந்திருந்தவன் அசையாத வண்ணம் மேலே ஏறி அமர்ந்தாள் சக்தி.

  

“லுக் லுக்! ஐ ஹாவ் அ ரீசன்.” அவன் வலியோடுப் பேசினான்.

  

பளாரென்று அறை ஒன்றைக் கொடுத்தாள் சக்தி.

  

“பெரிய இங்கிலீஷ் துரை! நடுராத்திரி திருட்டுத்தனமா உள்ளே வந்துட்டு இங்கிலீஷ்ல தான் பேசுவாராம். யாரு நீ, எதுக்கு வந்த? உண்மையை சொல்லு! இல்லை, பல்லெல்லாம் தட்டி எடுத்துருவேன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.