(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“டேய், அசையாம இரு. கட்டிப் போட்டுட்டு போலீஸ் கிட்ட ஒப்படைச்சிடுவேன். தப்பித் தவறி அசைஞ்ச, நீ இன்னைக்கு அவ்வளவு தான். காலி!”

  

“நான் அசைய மாட்டேன். ஐ ப்ராமிஸ்!” இப்போதும் வலியுடன் முனுமுனுத்தான் அவன்.

  

“திருட வந்துட்டு ப்ராமிஸ் வேற!” அவன் மீது ஒரு கண் வைத்தப் படி அறையின் விளக்கு ஸ்விட்சை தட்டி ட்யூப் லைட்டை உயிர்ப்பித்தாள் சக்தி.

  

கண்கள் கூசவும் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான் தரையிலிருந்தவன்.

  

அவன் மேலேயே கவனத்தை வைத்துக் கொண்டு, அங்கிருந்த மேஜை மீதிருந்த அவளுடைய கம்ப்யூட்டரின் எக்ஸ்ட்ரா பவர் கேபிளை எடுத்தாள் சக்தி.

  

“எழுந்திரு, கையை கட்டப் போறேன். தேவை இல்லாமல் ஒரு அடி அசைஞ்சாலும் நீ காலி!”

  

முதலில் வாங்கிய அடிகளாலோ, அல்லது சக்தியின் மிரட்டலாலோ, அவன் தப்பிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை.

  

கையிலிருந்த கேபிளை வைத்து அவனின் கைகளை பின்னால் வைத்துக் கட்டினாள் சக்தி.

  

அவனின் காலை கட்டலாமா என்று அவள் யோசித்தப் போது, அவளையே கவனித்துக் கொண்டிருந்த அவன் பேசினான்.

  

“எதுக்கு உங்க எனர்ஜியை வேஸ்ட் செய்றீங்க? ஐ வில் ஸ்டே ஹியர், பிலீவ் மீ. உங்களோட என்னால ஃபைட் பண்ண முடியாது.”

  

சக்தி அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்!

  

“யாரு நீ?” என அவனிடம் கேட்டாள் சக்தி

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.