(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“பாட்டி, என்ன என்னென்னவோ உளருறீங்க?” பாட்டியின் பேச்சினால் எழுந்த அதிர்ச்சியை மறைக்க முயற்சி செய்துக் கொண்டே கேட்டான் அவன்.

  

“ராஜா??? நான் உளருறேனா?? ஹையோ எனக்கு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கே...“

  

பர்வதம் பாட்டி கீழே சாயப் போகவும், சக்தி பாய்ந்து சென்று அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டாள்.

  

“பிபி என்ன செய்யுது? பிபி? பிபி??? இன்ஸ்பெக்டர் சார் அவங்களுக்கு ப்ரெஷர் பாருங்க.” அந்த புதியவன் வேக வேகமாக பேசினான்.

  

“அதெல்லாம் வேண்டாம். என்னை பிபின்னு கூப்பிடுறவன் ஒரே ஒருத்தன் தான். அம்மாவையும், டாக்டரையும் தவிர வேற யாருக்கும் அதைப் பத்தி தெரியவும் செய்யாது. நீ அவங்க மகன். என் ராஜா தானே?”

  

“பாட்டி!!! பிபி! பிபி!!!! உங்களை ஏமாத்த முடியுமா? ஐ லூஸ்!” என்றான் அவன்!

  

“எனக்கு தெரியும்! நீ வருவேன்னு எனக்கு தெரியும். அம்மா, அப்பா எங்கே ராஜா??? எப்படி இருக்காங்க? ஏன் ஒண்ணுமே சொல்லமா மூணுப் பேரும் போனீங்க??? இன்ஸ்பெக்டர் சார் முதல்ல ராஜா கையில இருக்க விலங்கை எடுங்க. இவன் இந்த வீட்டு சொந்தக்காரன். என் ராஜா. என் ராஜா வந்துட்டான்!” அக்னி நட்சத்திர ஜனகராஜ் ஸ்டைலில் குதூகலித்தார் பர்வதம்.

  

தென்றல்வாணன் சந்தேகத்துடன் புதியவனைப் பார்த்தான்.

  

“சாரி இன்ஸ்பெக்டர் சார். அவங்க சொல்றது உண்மை தான்.” இலகுவாக சொன்னான் அந்த நெட்டைக் கொக்கு புதியவன்!

  

“உண்மையா இருந்தாலும் நீ ஸ்டேஷனுக்கு வந்து தான் ஆகனும். நான் விசாரிக்காம விட முடியாது,” என்றான் தென்றல்வாணன்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.