(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 25 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

க்தி சத்தமாக பாட்டிக்கு கேட்பதுப் போல பேசினாள், இல்லை, கத்தினாள்!

   

“பாட்டி, எவனோ ஜன்னல் வழியா வீட்டுக்குள்ளே திருட வந்திருக்கான். நான் அவனைப் பார்த்துக்குறேன். நீங்க இங்கே வர வேண்டாம். உடனே போலீஸ்க்கு போன் போடுங்க. 100 கூப்பிடுங்க இல்லன்னா இன்ஸ்பெக்டர் தேன் நம்பர் இருந்தா கூப்பிடுங்க.”

  

“பத்திரம் சக்தி. மாடிப் படி பக்கத்துல இரண்டு உருட்டுக் கட்டை வச்சிருக்கேன். வேணும்னா எடுத்துக்கோ. நான் தேன் சாரை கூப்பிட்டுட்டு வரேன்,” என பர்வதம் படபடப்புடன் சொன்னார்!

  

சக்தி பதில் சொல்வதற்கு முன், அவள் கையில் மாட்டி அடி வாங்கியவன் மீண்டும் புலம்பினான்.

   

“ஹையோ! லுக் கட்டை எல்லாம் எடுக்காதீங்க. ஆல்ரெடி கண்ணு, தலை, உடம்பு எல்லாம் வலிக்குது. ப்ளீஸ் கெட் டவுன் ஆஃப் மீ!”

  

“வாயை மூடு! ரொம்ப பேசின, வாய்ல அடுத்த அடிப் போடுவேன். உன்னை கட்டி வைக்குற மாதிரி என் கிட்ட எதுவும் இல்லை. பாட்டி வர வரைக்கும் வெயிட் பண்ணு. கயிறு எடுத்துட்டு வர சொல்றேன்.”

  

“சீ, ஐ ஆம் நாட் ஈவன் ஃபைட்டிங்!”

  

சக்தி கோபமாக பதில் சொல்வதற்கு முன் பாட்டியின் குரல் மீண்டும் கேட்டது.

  

“சக்திம்மா போலீஸ் வராங்க. நீ பத்திரம்!”

  

“பாட்டி, கயிறு ஏதாவது வச்சிருக்கீங்களா?”

  

“நீ தூங்குற அந்த ரூம் டேபிள் ட்ராயர்லேயே இருக்கும் பாரு,” சத்தமாக பாட்டியிடம் இருந்து பதில் வந்தது

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.