”என்ன கொம்பா இன்னுமா உன்னோட கோபம் போகலை”
”போகாது சாகறவரைக்கும் இந்த விசயத்துக்காகவே உன்னை நான் மன்னிக்கப் போறதில்லை”
”சரி மன்னிக்காத நீயெல்லாம் மன்னிக்கனும்னு எனக்கொன்னும் ஆசையில்லை“ என சொல்லிக் கொண்டே படுத்தாள்
”எதுக்கு என்னை இங்க வரவழைச்ச என்ன விசயம்”
என கேட்க அவளோ ஒருக்களித்து படுத்தபடி அவனைப் பார்த்து சிரித்தாள்
”பொழுது போகலை அதான் உன்னை வைச்சி டைம்பாஸ் பண்ணலாம்னு இருக்கேன்”
”அதுக்கு நானா கிடைச்சேன் எனக்கு தூக்கம் வருது கண்ணு இருட்டுது தள்ளிபடு நான் தூங்கனும்”
”ஓ அப்படியா சரி சரி வந்து படு வா”
”நீ எழுந்து போ”
”முடியாது”
”ப்ச் எழுடி உசுரை வாங்காத எழுந்து தொலை” என அவளை எழுப்பி விட அவளோ படுக்கை மீது ஏறி நின்று
”முடியாது” என சொல்ல அவளை பிடித்து இழுத்தான்
”இறங்கு இறங்குடி” என இழுக்க அவளோ தடுமாறி அப்படி இப்படி என ஆடி நிற்க