”என்னம்மா இது பாவம்மா மாப்பிள்ளை என்னதான் உனக்கு கோபம் இருந்தாலும் ஒரு ஆம்பளையோட தவிப்போட விளையாடாதம்மா அது உன் வாழ்க்கைக்கு நல்லதில்லை”
”இருக்கட்டும்பா எத்தனை முறை என் கல்யாணம் நின்னப்ப நான் மனசு உடைஞ்சிப் போயிருக்கேன், ஒவ்வொரு முறையும் நீங்க பார்த்த மாப்பிள்ளைதான் என் புருஷன்னு எத்தனை கனவுகளை கண்டிருப்பேன், அப்புறம் ஒவ்வொரு கல்யாணம் நிக்கறப்பவும் என் மனசு பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா, அதை அவர் புரிஞ்சிக்கனும்னுதான் இப்படியெல்லாம் அவரை வெறுப்பேத்தறேன்”
”இது எத்தனை நாளுக்கும்மா”
”தெரியலைப்பா என்னிக்கு எனக்கு அவரை பிடிச்சிருக்கோ என்னிக்கு அவரை நான் புருஷனா நினைக்கிறேனோ அதுவரைக்கும் இப்படித்தான்”
”எங்கயும் நடக்காத விசயம்லாம் நம்ம வீட்லதான் நடக்குது, தெருவில நடமாடமுடியலை எல்லாரும் மாப்பிள்ளைக்காக என்கிட்ட வந்து சிபாரிசு செய்றாங்க, பாவம் அவரை ஏன் கஷ்டப்படுத்தறீங்க, அவரை வாழவிடுங்கன்னு கெஞ்சறாங்க”
“ஓ அப்படியா சூப்பர்”
”என்னம்மா இப்படி சொல்ற”
”சும்மாயிருங்கப்பா எத்தனை முறை என் கல்யாணத்தை இந்த ஊர்காரங்க கருணையில்லாம நிப்பாட்டியிருப்பாங்க, அப்ப நம்மளோட கஷ்டத்தை பார்த்தாங்களா இப்ப கொம்பனுக்கு கஷ்டம் வந்ததும் உடனே துடிச்சிப் போய் வந்து உங்ககிட்ட கெஞ்சறாங்க, இதுக்கு முன்னாடி எத்தனையோ முறை நீங்க இந்த ஊர்க்காரங்க கிட்ட கெஞ்சியிருப்பீங்க, மதிச்சாங்களா அவங்க, இப்ப மட்டும் நாம அவங்களை மன்னிக்கனுமா போங்கப்பா முடியாது”
”எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைம்மா இது உன்னோட வாழ்க்கை மட்டும் இல்லை