(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

முடியாமல் அவனது முதுகில் விழுந்தாள் அவனோ அவளை உப்புமூட்டை போல தூக்கிக் கொண்டான்

  

”என்ன என் மேல ஏறிக்கிட்ட இறங்கு”

  

”நானா ஏறினேன் நீ இழுத்தப்ப பேலன்ஸ் தவறி உன் மேல விழுந்தேன் நீயாதான் என்னை உப்புமூட்டை தூக்கி வைச்சிருக்க”

  

”அய்யோ உன்னோட தொல்லையா போச்சி இறங்கு முதல்ல”

  

”எப்படி இறங்கறது பயமாயிருக்கு” என சொல்லியவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவனுக்கு கஷ்டமாகிப் போனது

  

”யப்பா முடியலைடா சாமி ஏய் முறைப்பொண்ணே இறங்கித் தொலை எனக்கு என் முதுகுல நீயிருக்கறது எனக்கு என்னென்னமோ பண்ணுது”

  

”எனக்கு பயமாயிருக்கு”

  

”எனக்கு வெறுப்பாயிருக்கு இறங்குடி” என சொல்ல அவளோ இன்னும் அணைக்க அவனுக்குள் மீண்டும் தீ எரிய ஆரம்பித்தது, கண்கள் மூடி நின்றான், அவளோ அவனை அணைத்தபடி இருந்தாள், அவளை உப்புமூட்டை போல ஏற்றி வைத்துக் கொண்டு உணர்ச்சி வெள்ளத்தில் தடுமாறினான்.

  

உறக்கம் ஒரு பக்கம் வா வா என அழைக்க மறுபக்கம் உணர்ச்சிகள் அவனை இம்சிக்க படாதபாடு பட்டான், அவளுக்கு சில நொடிகளில் பயம் விலகியது அவன் முதுகில் ஏறிக் கொண்டு இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது

  

”ஐஐ ஜாலியா இருக்கு” என சொல்ல அதைக்கேட்டு திடுக்கிட்டான் கொம்பன்

  

”இருக்கும்டி இருக்கும் இறங்கறியா”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.