(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”இதை பார்த்து என்ன செய்றது”

  

”நல்லா பாருங்க இது நேத்து கொம்பனோட அம்மாவும் அப்பாவும் கொடுக்க வந்த அதே 20 லட்சம்தான்”

  

”நிஜமாவா” என ஆச்சயர்பட்டான்

  

”ஆமாம் நேத்தே நான் கவனிச்சேன், பணக்கட்டை சுத்தி ரப்பர் பேண்ட் போடலை, மஞ்சள் கயிறு சுத்தியிருந்தாங்க குங்கும பொட்டு வைச்சிருந்தாங்க“

  

”ஆமாம் கொம்பனோட வீட்டு பழக்கமே இதுதான், அவங்க அம்மா இப்படித்தான் மஞ்சள் கயிறுல பணத்தை கட்டி வைப்பாங்க யாருக்காவது கொடுக்கறப்ப குங்கும பொட்டு வைச்சி தருவாங்க”

  

”இதை பார்த்த பின்னாடிதான் எனக்குப் புரிஞ்சது அவங்களே இந்தாள்கிட்ட பணம் கொடுத்து இங்க அனுப்பி  வைச்சிருக்காங்கன்னு”

  

”இந்த விசயம் கொம்பனுக்கு”

  

”தெரியக்கூடாதுன்னு நினைக்கறாங்க, அதனால நானும் எங்க தெரிஞ்சிடுமோன்னு நினைச்சி பணத்தை வாங்கிட்டேன் இப்ப சொல்லுங்க நான் செஞ்சது தப்பா”

  

”தப்பில்லை ஆனாலும் கொம்பனோட பார்வையில நீ கெட்டவளா தெரியறயே”

  

”அதுக்கு என்ன செய்றது நாலு நல்லது செய்றப்ப நம்ம மேல பழி பாவம் வர்றது சகஜம்தானே, உங்க கொம்பனால என் வாழ்க்கையில நடந்ததை வைச்சி சொல்றேன், அவர் ஊர்காரங்களுக்கு உதவ போனதாலதானே ஊர்காரங்க எனக்கு நடக்க வேண்டிய கல்யாணத்தை நிப்பாட்டினாங்க எனக்கு கெடுதல் செய்தாங்க”

  

”உண்மைதான் உண்மைதான் நான் கூட உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.