(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அப்படியா சரி சரி இதை சொல்லத்தான் வந்தீங்களா”

  

”ஆமாம் தம்பி அப்படியே உனக்கு இந்த பணத்தையும் தரலாம்னு வந்தேன்” என சொல்லி சட்டென 20 லட்சத்தை நீட்ட கொம்பன் தயங்கினான்

  

”எதுக்குண்ணா பணம்”

  

“உன் நாய்களை நான் வித்தேன் அதை வளர்த்த உனக்கு கமிஷன் பணம் தரனும்ல இதுல 20 லட்சம் இருக்கு தம்பி வாங்கிக்க, எப்படியும் மீதியிருக்கற நாய்களும் வித்துப் போகும்ங்கற நம்பிக்கையில மொத்தமா கணக்கு போட்டு உனக்கு இந்த பணம் கொண்டு வந்தேன் இதோட நம்ம டீலிங் முடிஞ்சதுப்பா”

  

”ஆனா அண்ணா நான் பணத்துக்காக என் நாய்களை விக்கலை, அதை பார்த்துக்க ஆள் இல்லாததால வித்தேன், அவ்ளோதான் எனக்கு பணம் தேவையில்லை”

  

”அட இது ஒண்ணும் நாய்களை வித்த பணம் இல்லை இது வெறும் கமிஷன்தான், பிடி தம்பி” என சொல்ல கொம்பன் மறுத்தான் ஆனால் காவேரியோ

  

”அந்த பணத்தை என்கிட்ட கொடுங்க நான் அவரோட மனைவிதான்” என சொல்ல வந்தவரும் அந்த பணத்தை காவேரியிடம் தர அதை உடனே வாங்கிக் கொண்டு தன் தந்தையிடம் தந்துவிட கொம்பனோ அவளை எரிப்பதைப் போல பார்த்தான்

  

”எதுக்கு முறைக்கற எப்படியோ உன் பிரச்சனை முடிஞ்சதுல்ல”

  

”ஆனா நான் நாய்களை பணத்துக்காக விக்கலை”

  

”சரி இருந்துட்டுப் போ, இப்ப என்ன நீயா பணத்தை வாங்கின நான்தானே வாங்கினேன் பழி பாவம் வந்தா எனக்கே வரட்டும் போதுமா”

  

”நீ சரியான சுயநலவாதி, உனக்கு இரக்க குணமே இல்லையா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.