“நிலத்து பத்திரம்ங்கறது தாய் போல அதை அடமானம் வைக்கறது தாயை அடமானம் வைக்கறதுக்கு சமம் நமக்கு சோறு போடற பூமியை அடமானம் வைக்க என்னால முடியாது”
”அப்ப ஒண்ணு செய்யலாம் பேசாம உன்னையே அடமானம் வைச்சி பணத்தை வாங்கிக்க”
”என்னையா ஓஹோ உன்கிட்ட நான் அடிமையா இருக்க மாட்டேன்”
”அப்புறம் எப்படித்தான் பணத்தை தருவியாம்”
”நான் வணங்கற ஈசன் என்னை கைவிடமாட்டாரு எனக்கு உதவி செய்வாரு”
”எங்க இருக்காரு உன்னோட ஈசன்” என நக்கலாக காவேரி கேட்ட நேரம் அவனது நாய்களை எடுத்துச் சென்றவன் அங்கு வந்து நின்றான்
”தம்பி கொம்பா” என அழைக்க அனைவரும் என்னவென பார்த்தார்கள்.
அவனை அனுப்பியது கொம்பனின் பெற்றோர்கள்தான் அது தெரியக்கூடாதென சொல்லியிருந்தார்கள், சொல்லப்போனால் நாய்களுக்கென கொம்பன் பணம் வாங்கவில்லை அது அவன் வளர்த்த நாய்கள் என்பதால் இலவசமாக தந்திருந்தான், அதை வாங்கியவனும் பணம் தர முன்வந்தும் தடுத்தான், இப்போது கொம்பனின் பெற்றோரோ இவனிடம் பணம் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அது தெரியாமல் கொம்பனும்
”வாங்க அண்ணே என்ன இவ்ளோ தூரம்”
”உன் நாய்களுக்கு செம கிராக்கிப்பா, கடகடன்னு வித்துப் போகுது நல்லாவே ட்ரெயினிங் கொடுத்திருக்கப்பா, ஒவ்வொரு நாயும் ஆயிரக்கணக்குல வித்துச்சி இன்னும் நாய்கள் இருக்கு அதுவும் கூடிய சீக்கிரம் வித்திடும், நானா நீயான்னு போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்கப்பா”