(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”காவேரி என்னம்மா இப்படியெல்லாம் நடந்துக்கற மாப்பிள்ளையை ஏன் இப்படி சங்கடப்படுத்தற பாவம்மா அவரு ஒண்ணும் தெரியாத அப்பாவி“ என்றார் சண்முகம் கவலையுடன்

  

”அப்பாவியா இருந்தா காலம் தள்ள முடியாதுப்பா, சொந்த வீட்லயே உஷாரா இருந்தாதானே பிழைக்க முடியும்”

  

”இந்த விசயம் சம்பந்தி வீட்டுக்கு தெரிஞ்சா வம்பாயிடும்”

  

”நீங்க கவலைப்படாதீங்கப்பா, பார்த்துக்கலாம், நாம ஒண்ணும் அநியாயமா எதையும் கேட்கலையே, நடந்ததுக்கு நஷ்ட ஈடு கேட்டோம், அது என்ன தப்பா”

  

”என்னவோம்மா இதனால உன் வாழ்க்கையில பிரச்சனை வராம இருந்தா சரி”

  

”வராதுப்பா வராது, நீங்க கவலைப்படாம இருங்கப்பா அது போதும்” என சொல்ல அவர் கவலையுடன் தன் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.

  

காவேரியோ கொம்பனின் வருகைக்காக எதிர்நோக்கி காத்திருந்தாள்

  

கொம்பனோ தன் தந்தையிடம் சென்று சொத்தையோ பணத்தையோ வாங்க மனம் வரவில்லை, அதற்கு பதிலாக தெரிந்தவர்களிடம் சென்று கடன் வாங்க நினைத்தான், ஆனால் பணம் இருந்தும் அவனுக்கு கடனாக பணம் தர யாரும் முன்வரவில்லை, மாறாக இலவசமாகவே பணம் தர முன்வந்தார்கள், ஆனால் இலவசமாக பணம் பெற அவனுக்கு விருப்பமில்லை, அதனால் ஊர் முழுக்க சுற்றி கால் கடுக்க நின்று பேசி எங்கும் அவன் நினைத்தது நடவாமல் போகவே ஓய்ந்துப் போய் வீடு வந்து சேர்ந்தான்.

  

வீட்டிலோ அவனது பெற்றோர் காத்திருந்தார்கள் இவன் ஊருக்குள் 20 லட்சம் பணம் கேட்ட விசயம் யாரோ அவனது பெற்றோரிடம் சொல்லிவிட 20 லட்சத்துடன் மாலை வேளையிலேயே காவேரியின் வீட்டை வந்தடைந்தார்கள், கொம்பனுக்காகவே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.