(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”ஓ அப்படி வர்றியா இரு இரு வரேன்“ என சொல்லியவள் நேராக தன் தந்தையின் அறைக்குச் சென்று அவரிடம் விசயத்தை கூற அவரோ சங்கடப்பட்டார்

  

”வேணாம்மா எதுக்கு இப்படியெல்லாம் நடந்துக்கற, நம்மகிட்ட என்ன பணமா இல்லை இதெல்லாம் போய் அவர்கிட்ட கேட்டுக்கிட்டு வேணாம்மா“

  

”இதப்பாருங்கப்பா நம்மகிட்டயும் பணம் இருக்கு இல்லைன்னு நான் சொல்லலையே ஆனா எனக்கு நடந்த அவமானத்துக்கு நஷ்டஈடு செய்யனும்ல”

  

”என்னம்மா அதுக்குதான் அவரோட உனக்கு கல்யாணம் ஆச்சே”

  

”ஆனா என்னப்பா, அதுக்காக அப்படியே விட முடியுமா என்ன, அவருக்கு பொறுப்புங்கறதே இல்லை, கஷ்டம்னாலே என்னன்னு தெரியாம வளர்த்து விட்டிருக்காங்க, இங்கயும் அப்படியே இருந்தா சரியா வராதுப்பா அவருக்கு பொறுப்புகளை தந்தா அதை எப்படி அவர் சரியா பார்த்துக்குவாராம், மனசுல கொஞ்சமாவது பயம் இருக்கனும் இல்லைன்னா நம்ம சொத்தை சரியா கவனிக்காம நமக்கென்ன வந்ததுன்னு விட்டாருன்னு வைங்க அவ்ளோதான் நம்ம சொத்து அழிஞ்சிடும்பா”

  

”என்னென்னமோ சொல்ற எனக்குப் புரியலைம்மா“

  

“அப்பா அதெல்லாம் விடுங்க, கல்யாணத்துக்கான வரவு செலவு கணக்கு எழுதி வைச்சிருப்பீங்களே அதை கொடுங்கப்பா“

  

”எதுக்கும்மா”

  

”ம் என் புருஷன் செலவான தொகையை தர்றதா சொன்னாரு தருவாரான்னு பார்க்கலாம்”

  

”என்னம்மா மாப்பிள்ளை கிட்ட போய் பணம் வாங்கறதா தப்பும்மா”

  

”ஏன் பொண்ணை பெத்தவங்க மாப்பிள்ளைக்கு வரதட்சனை தர்றதில்லை அதே போல

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.