”அதுக்கு சொத்தை கேட்கப் போறியா”
”ஆமாம்”
”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”
”நீ என்ன ஒத்துக்கறது, போடா நானே போய் கேட்டுக்கறேன், அவங்க தரமாட்டாங்கன்னு சொன்னா அப்ப இருக்கு”
”என்ன செய்வ“
”ம் கொம்பனை வீட்டை விட்டு விரட்டிடுவேன், என்னிக்கு சொத்தோட வரானோ அன்னிக்குதான் இந்த வீட்டுக்குள்ள சேர்ப்பேன்” என சொல்ல கணக்குபிள்ளை கலவரமாகி இவ்விசயத்தை உடனே கொம்பனிடம் சொல்ல விரைந்தான்.
அதைக்கண்டும் பதட்டமின்றி வீட்டிற்குள் வந்தாள் காவேரி, அதற்குள் கொம்பனிடம் விசயத்தை கூறி முடிக்க அவன் கோபத்துடன் காவேரியை நாடி வந்தான்
”என்ன நினைச்சிக்கிட்டு இருக்கற உன் மனசுல, எதுக்காக என் சொத்து வேணும்ங்கற”
”பின்ன நின்னுப் போன என்னோட 7 கல்யாணத்துக்காக என் அப்பா லட்சக்கணக்குல பணம் செலவழிச்சாரு, அந்த பணத்தை யார் தருவா“
”அதுக்குன்னு என் குடும்பத்தை பிரிக்கப் பார்க்கிறயா“
“சீ சீ நான் உன் குடும்பத்தை பிரிக்கலை சொத்தை மட்டும்தான் பிரிக்கிறேன்“
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் எவ்ளோ செலவாச்சின்னு சொல்லு நானே பணத்தை தரேன்”