இருவரின் பார்வையைக்கண்டு இவ்விருவருக்கும் கூச்சம் எழுந்தது, அதில் கணக்குபிள்ளையோ கொம்பனை காப்பாற்ற எண்ணி அவசர அவசரமாக கூச்சலிட்டான்
”அய்யோ இருபது லட்சமா” என அலற அதில் அவ்விருவரும் என்னவென அதிர்ந்து பார்த்தார்கள்
”ஏன்டா கத்தற”
”கொம்பா இந்த அநியாயத்தை பாரு உன் முறைப்பொண்ணு கல்யாணத்துக்கு செலவே 20 லட்சமா”
”அவ்ளோவா“ என வாய் பிளந்தான் கொம்பன்
”ஆமாம் நண்பா இதை எப்படி நீ அடைப்ப, வீரமா வசனம் பேசிட்டியே”
”இருடா சரியாதானே கணக்குப் பார்த்த”
“ஆமாம்பா சரியாதான் பார்த்தேன்“
“7கல்யாணத்துக்கு 20 லட்சமா 7 லட்சம்தானே வரும்”
”நீ ஒண்ணுப்பா ஒரே பொண்ணுன்னு நிறைய செலவு செய்திருக்காரு உன் மாமனாரு”
”எங்க அவரு” என தேட அவரே முன்வந்துப் பேசினார்
”இதோ இங்க இருக்கேன் மாப்பிள்ளை தப்பா நினைக்காதீங்க மாப்பிள்ளை, யாருக்கு நான் செலவு செய்யப் போறேன் என் பொண்ணுக்குதானே, அதான் செலவு பார்க்காம தண்ணியா காசை செலவு செய்துட்டேன்“
”அதுக்குன்னு இப்படியா நின்னுப் போன 7 கல்யாணத்துக்கு இவ்ளோ செலவு செய்தீங்களே