(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

காத்திருந்தார்கள் அனைவரும், கொம்பன் வரவும் அவனது பெற்றோர் அவனிடம் பாசமாக பேசினார்கள்

  

”என்னப்பா இப்படி களைச்சிப் போய் வந்திருக்க, எதுக்கு உனக்கு இந்த வேலை 20 லட்சம் என்ன 20 கோடின்னாலும் நீ கேட்டா நாங்க தரமாட்டோமா, எங்ககிட்ட பணம் கேட்கறதுல உனக்கு என்னப்பா கூச்சம் வேண்டிக்கிடக்கு, இது எல்லாமே உன்னோடதுதானே, உனக்காக சேர்த்து வைச்சது, உரிமையா கேட்காம இப்படி ஊர்காரங்ககிட்ட போய் கடன் கேட்கலாமா, இது நமக்கு அவமானம் இல்லையா, ஊர்காரங்க எங்களை தேடி வந்து பேசினாங்க பாவம் நீ கஷ்டப்படறேன்னு அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு, எவ்ளோ வருத்தப்பட்டு பேசினாங்க தெரியுமா, இது தேவையா சொல்லு இந்தா பணம் பிடி, இதை உன் பொண்டாட்டிக்கிட்ட கொடு போ” என சொல்ல அந்த பணத்தை வாங்க மறுத்தான் கொம்பன்

  

”என்னால இதை வாங்க முடியாது”

  

”ஏன் இது உன்னோடதுதான்”

  

”இல்லைப்பா இது என்னோட தன்மான பிரச்சனை நானே எப்படியாவது அந்த 20 லட்சத்தை சம்பாதிக்கிறேன்”

  

”எதுக்குடா நீ கஷ்டப்படனும் அதான் கையில பணம் இருக்கே அப்புறம் என்ன” என சொல்ல உடனே காவேரியும்

  

”அதானே அப்பா அம்மா பணம் தர்றதுல என்னத்த தன்மான பிரச்சனை வந்துடுது யாரும் உங்களை எதுவும் சொல்ல மாட்டாங்க அந்த பணத்தை வாங்கிக் கொடுங்க” என சொல்ல அவனோ முடியாது என தலையாட்ட அவளோ தன் மாமியாரிடம்

  

”அத்தை அவர் அப்படித்தான் புரியாம பேசிக்கிட்டு இருப்பாரு நீங்க கொடுங்கத்தை நான் வாங்கிக்கிறேன்” என சொல்ல அவரும் சரியென பணத்தை நீட்ட அதை வாங்க காவேரி வர இருவருக்கும் இடையில் நுழைந்தான் கொம்பன்

  

”இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.