”எப்படி”
”உன்னோட சொத்தை அடமானம் வைச்சிடு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பணத்தை கொடுத்து மீட்டுக்க”
”இதுவும் நல்லாதான் இருக்கு ஆனா யாரு எனக்கு கடன் தருவா இந்த ஊர்காரங்கதான் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களே“
”பரவாயில்லை அதான் நான் இருக்கேன்ல”
”நீயா! நீ வட்டி வியாபாரம் செய்றியா”
”இல்லை உனக்காக இந்த சலுகை தரேன், உன் சொத்து பத்திரத்தை கொண்டு வந்து கொடு அதுக்கு ஈடா 20 லட்சம் தரேன் அதை வாங்கி என் அப்பாகிட்ட கொடுத்துடு, அப்புறம் பணம் சம்பாதிச்சி கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து உன்னோட கடனை அடைச்சிக்க, நீ என் புருஷங்கறதால நான் உனக்கு வட்டி போடலை, அசல் கொடுத்தா போதும், அப்புறம் டைம் லிமிட்டும் கிடையாது, நீ சாகறதுக்குள்ள பணம் கட்டி பத்திரத்தை மீட்டுக்க, இந்த ஆஃபர் உனக்கு மட்டும்தான் என்ன சொல்ற ஓகேவா” என கேட்க அவனோ பலமக யோசித்தான்.
கணக்குப்பிள்ளையோ அதைக்கேட்டு கொம்பனிடம் வந்து
”கொம்பா வேற வழியே இல்லை, உன் முறைபொண்ணு சொல்றது நல்ல ஆஃபரா இருக்கு, பேசாம பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கி உன் மாமனார்கிட்ட கொடுத்துடு, அப்புறம் பணத்தை சேர்த்து கொடுத்து பத்திரத்தை மீட்டுக்கலாம், வட்டி கூட இல்லையாம் அசல் தந்தா போதுமாம் என்ன சொல்ற, நான் வேணா போய் பத்திரத்தை கொண்டு வரவா”
”டேய் நிறுத்துடா மடையா அவள்தான் புரியாம பேசறாள்ன்னா நீயுமா”
”ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு”