அவரும் நமக்கு வரதட்சணை தரட்டுமே, அதான் நம்மளைவிட 3 மடங்கு சொத்து வைச்சிருக்காங்களே கொடுத்தா என்ன தப்புங்கறேன்”
”என்னம்மா வழக்கத்தில இல்லாத கதையை சொல்ற, பொண்ணுக்குதான் வரதட்சணை தருவாங்க பையன்களுக்கு தரமாட்டாங்கம்மா, இந்த காலகட்டத்தில பெரிசா வரதட்சணை கூட யாரும் வாங்கறதில்லையாம்”
”பரவாயில்லைப்பா நமக்கு நடந்த நஷ்டத்தை அவர்தானே தீர்க்கனும்”
”ஆனா காவேரி“
”அப்பா போதும் இதுக்கு மேல ஏதும் பேசக்கூடாது, கணக்கு வழக்கு நோட் கொடுங்க போதும்” என அதட்ட மகளின் பிடிவாதத்தில் என்ன செய்வது என தெரியாமல் அங்கு இங்கு என தேடி பிடித்து அந்த வரவு செலவு கணக்கு புத்தகத்தை அவளிடம் தர அதை வாங்கிக் கொண்டு வெளியேறி கொம்பனிடம் நீட்டினாள் காவேரி, அவனும் அந்த புத்தகத்தை வாங்கி கணக்குபிள்ளையிடம் தந்து
”கணக்கை பாரு மொத்தமா பாக்கி வைக்காம அடைச்சிடலாம்” என சொல்ல உடனே கணக்கு பிள்ளையும் அந்த புத்தகத்தை வாங்கி கணக்கு போடலானான். அதுவரை கொம்பனும் காவேரியும் ஒருவரை ஒருவர் எதிரிகள் போல பார்க்கலானார்கள், எவ்வளவு நேரம்தான் அப்படியே பார்த்து வைப்பது, மெல்ல மெல்ல அவர்களின் பார்வை மாறியது, அவனை ரசிப்புடன் பார்க்க முயன்றாள் காவேரி, அவளின் ரசனையான பார்வையை ரசிக்கலானான் கொம்பன்.
கணக்குபிள்ளையோ கணக்கு வழக்கு பார்க்க அவனுக்கு துணையாக சண்முகம் இருந்தார். இருவருமாக கணக்குகளை பார்த்து முடிக்க அரை மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள் அதன்படி நின்று போன 7 கல்யாணத்திற்கு சேர்த்து மொத்தமாக இருபது லட்சம் செலவாகியிருந்தது. அதை கொம்பனிடம் சொல்ல எண்ணி பார்க்கையில் கொம்பனோ காவேரியின் மீது மோகபார்வையை வீச அவளோ அந்த பார்வைக்கு எதிர்பார்வை போல ஈர்ப்புடன் பார்த்தாள்.